தொழில்துறை இணைப்பு மாநாடு 2024 என்கிற நான்கு நாட்களுக்கான இண்டஸ்ட்ரி கனக்ட் கான்க்லேவ் , விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. மத்தியப் பிரதேச மாநில குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சர் சதன்யா காஸ்யப், தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து தலைமை விருந்தினரின் சிறப்புரையை ஆன்லைன் வழியாக ஆற்றினார்.


மத்திய பிரதேச அமைச்சர் பாராட்டு:


அமைச்சர் தமது சிறப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி சீரிய தலைமையிலான ஆட்சியில் ,நாடெங்கிலும் ஸ்டார்ட் அப் என்னும் தொடக்க நிலை நிறுவனங்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகளைப் பாராட்டினார். ஸ்டார்ட் அப் களில் முன்னிலை வகிக்கும் மாநிலமாக மத்தியப் பிரதேசம் பரிணமிக்கும் நாள் விரைவில் தோன்றும் என்று கூறினார். அவர் மேலும் பேசுகையில் , விஐடி போபால் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்துள்ளதற்காக , விஐடி போபால் மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு நன்றி கூற வேண்டும் என்றார்.


தொடர்ந்து அவர் தமது உரையில் கூறியதாவது, மாணவமணிகள் , மத்தியப் பிரதேசத்தின் ஊரகப் பகுதிகளிலிருந்து புத்தாக்க உத்திகளைப் பெற்றிட வேண்டும் . மேலும் அவர்கள் மத்தியப் பிரதேசத்தின் தொழில் துறை வளர்ச்சியை வலிமைப்படுத்தும் வகையில் அவர்கள் தங்களுடைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும். 


இன்டஸ்ட்ரி இன்ஸ்ட்டியூஷனுக்கான (Industry Institution) வலைதளம்


அமைச்சர் மேலும் உரை ஆற்றும் போது மத்தியப் பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டுக்காக விஐடி போபால் பல்கலைக்கழகம் , அளப்பரிய பங்களிப்பை பற்றி எடுத்துக் கூறி தமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார். ட்ரஸ்ட்டி ரமணி பாலசுந்தரம் முன்னிலையில் முதல் நாள் நிகழ்வில், நிகழ்வின் சிறப்பு பிரதிநிதிகளான C – DAC , Chirayu University மற்றும் ICARSA உடன் ஒப்பந்தங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில், விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் ட்ரஸ்ட்டியால் இன்டஸ்ட்ரி இன்ஸ்ட்டியூஷனுக்கான வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது . நாட்டுப் பண் இசைத்தல் உடன் தொடக்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


ஜூலை 31 , 2024 முதல் ஆகஸ்ட் 3 ,2024 வரை நடைபெறும் இந்த சிறப்பு மாநாட்டில் வெவ்வேறு துறைகளைச் சார்ந்த பின்வரும் நிறுவனங்களின் சிறப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.


பரஸ்பர வளர்ச்சி:


அவையாவன C- DAC , Cirayu University , ICARDA, MANIT , MPCST , NETLINK , CoreCard India Pvt Ltd , Prepord Corp , We360 , NKM Strips & Cables , Volvo Eicher Kirloskar Brothers, Impetus Technologies , Jet Aerospace & TCS இந்த மாநாட்டின் சிறப்பம்சங்கள் - நீண்ட கால கூட்டாளித்துவத்தை வளர்த்தெடுக்க ஏதுவாக, பல்வகை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொழில்துறை 4.0 லிருந்து 5.0 -க்கு பரிணாமம் பெற உறுதுணை புரியும் நவீன
தொழில்நுட்பங்கள் குறித்த , வல்லுநர்கள் பங்கேற்கும் தொழில்நுட்ப உரைகள் மற்றும் விவாத அரங்குகள் - செயற்கை தொழில்நுட்பம் குறித்து கவனம் செலுத்துகிற, பெங்களூரு ப்ரோட்கார்ப் நடத்தும் 24 மணிநேர ஹேக்கத்தான் 40 செயல்திட்டங்களையும் போஸ்ட்டர்களையும் காட்சிப்படுத்தும் புராஜக்ட் எக்ஸ்போ மற்றும் போஸ்ட்டர் காண்பித்தல் வர்த்தகத்தில் தொழில்முனைவையும் புத்தாக்கத்தையும் வளர்த்தெடுக்கும் பிசினஸ் ஐடியாக்கள் இந்த இண்டஸ்ட்ரி கான்க்லேவ் என்னும் சிறப்பு மாநாட்டின் நோக்கமானது கல்வித்துறையும் தொழில்துறையும் ஒன்றிணையும் சூழலை உருவாக்கி அதன் வாயிலாக , தகவல் அறிவைப் பகிர்ந்து கொண்டு யதார்த்த உலகின் சவால்களைப் புரிந்து கொண்டு பரஸ்பர வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.


மாணவர்கள் , கல்வியாளர்கள் , ஆராய்ச்சியாளர்கள் , தொழில்துறைப் பிரமுகர்கள் ஆகியோர் அனைவரையும் ஒரே கூரையில் ஒன்றிணைப்பதன் மூலம் இந்த கருத்தரங்கு, புத்தம்புதிய தீர்வுகளுக்கும் வருங்காலத்திற்கு ஏற்ற தொழில்வல்லுநர்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை .