தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகாரப்பூர்வமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பண்டிகையின்போதும் மெகா பம்பர் குலுக்கல் சீட்டு விற்பனை நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, விஷூ ஆண்டு பிறப்பை முன்னிட்டு ரூபாய் 10 கோடிக்காக லாட்டரி பரிசுச்சீட்டு விற்பனை நடத்தப்பட்டது. இந்த 10 கோடி பரிசுத்தொகைக்காக 43 லட்சத்து 69 ஆயிரம் லாட்டரி சீட்டு அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. முதல் பரிசான 10 கோடி ரூபாய் எச்பி 727990 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 22-ந் தேதி வெளியானது.
ஆனால், 10 கோடியை வென்ற லாட்டரிச்சீட்டின் எண் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் தற்போது வரை யாருமே கேரள அரசை அணுகவில்லை. திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே சில்லறை விற்பனை செய்யும் வல்லக்கடவு ரங்கன் என்பவர் கடையில்தான் இந்த லாட்டரிச்சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த லாட்டரி சீட்டை வாங்கியம் வெளியூர் அல்லது வெளிநாட்டைச் சேர்நதவராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் 10 கோடி பரிசுத்தொகையை வென்ற லாட்டரிச்சீட்டு உரிமையாளர் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்று கேரளா முழுவதும் ஒரே பரபரப்பாக உள்ளது. கேரள அரசும் அவரைத் தீவிரமாக தேடி வருகிறது. விஷூ பம்பர் லாட்டரிச்சீட்டு விற்பனைக்கான மொத்த பரிசுத்தொகை ரூபாய் 34 கோடி ஆகும். முதல் பரிசு ரூபாய் 10 கோடி ஆகும். இரண்டாவதுப பரிசு ரூபாய் 50 லட்சம் ஆகும். மூன்றாவது பரிசு 12 நபர்களுக்கு ரூபாய் 60 லட்சம் ஆகும். அதாவது ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 5 லட்சம் ஆகும். 10 கோடி ரூபாய் முதல் பரிசுக்கான இந்த லாட்டரி விற்பனை ரூபாய் 250 கோடிக்கு நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க : Chennai Crime: ஆன்லைனில் வாங்கிய ரம்பம்! வலிக்காமலிருக்க மயக்க மருந்து! பல்லாவரம் கொலையில் திடுக் தகவல்கள்!
மேலும் படிக்க: இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்த கும்பல்.. விசாரணையில் தீவிரம் காட்டும் காவல்துறை
மேலும் படிக்க : Crime : ட்ரில்லிங் மெஷினில் குழந்தைகளையும், மனைவியையும் அறுத்த கொன்ற நபர், தானும் தற்கொலை.. பொழிச்சலூரில் பயங்கரம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்