தமிழ்நாடு : 



  • மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் : சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்பு

  • மாணவி சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போனேன்; தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது : முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு

  • எடப்பாடி அணி 3வது முறையாக சபாநாயகருக்கு கடிதம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது 

  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 286 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

  • சென்னை தீவுத்திடலில் நாளை முதல் பட்டாசு விற்பனை தொடங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  •  இன்று காலை முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

  • தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6,718 பேர் பல்வேறு காரணங்களால் உயர்க்கல்வியை தொடரவில்லை - கல்வித்துறை தகவல்

  • பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக வாபஸ் - போராட்ட குழு அறிவிப்பு

  • தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்தியா : 



  • மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை; நீதி கிடைப்பதில் தாமதம் - சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

  • உலக பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு 107வது இடம் : ஆண்டுக்கு ஆண்டு பின்தங்கும் அவலம்

  • நாட்டிலேயே முதல் முறையாக ஆந்திரா - தெலுங்கானா இடையே கிருஷ்ணா நதி மீது ரூ.1,082.56 கோடியில் கேபிள் மேம்பாலம் 

  • இந்தியாவில் இனி பேக் செய்யப்பட்ட பரோட்டாவுக்கு 18 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட உள்ளது.

  • இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்

  • நாட்டில் முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் இந்தியில் எம்பிபிஎஸ் : இன்று தொடங்கி வைப்பு

  • புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழுடன் அடுத்த சில மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உலகம்:



  • துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • உக்ரைன் மீது புதிய தாக்குதல்களை நடத்த தேவையில்லை - ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்

  • கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் 

  • பாகிஸ்தான் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 200க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிப்பு


விளையாட்டு:



  • ஆசிய கோப்பை மகளிர் கோப்பை : 7வது முறையாக இந்திய மகளிர் அணி சாம்பியன் - பைனலில் இலங்கையை வீழ்த்து அசத்தல்

  • டி 20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் விளையாட உள்ள 11 இந்திய வீரர்கள் பட்டியல் தயார் - இந்திய கேப்டன் ரோகித் சர்மா 

  • ஜோஸ் பட்லர் பந்து வீசுவதற்கு முன்பு கிரீஸை தாண்டியதாக எச்சரித்து பேட்டிங் செய்ய அனுமதித்த ஸ்டார்க்கின் வீடியோ வைரல்

  • உலககோப்பை டி20 தொடர் தகுதிச்சுற்று போட்டி இன்று தொடக்கம் : இலங்கை - நமீபியா இன்று மோதல்