Viral Video : உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்ப தெரியாமல் திணறிய சப்-இன்ஸ்பெக்டரை பார்த்து டிஐஜி அதிர்ச்சி அடைந்தார்.
உத்தர பிரதேசத்தின் ம் சந்த்கபீர் நகர் காவல் நிலையத்திற்கு டி.ஐ.ஜி., பரத்வாஜ் நேற்று திடீரென ஆய்வு நடத்த வந்தார். அப்போது, அங்கிருந்த சப் - இன்ஸ்பெக்டரிடம் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்புமாறு கூறினார். அவரும் குண்டு நிரப்ப தெரியாமல் திணறினார்.
அந்தத் துப்பாக்கியை பீரங்கி போல நினைத்து, அதன் முனையில் குண்டை வைத்து சுட முயற்சித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிஐஜி பரத்வாஜ், போலீஸ் பயிற்சியில் என்ன கற்றுக் கொண்டார்கள்...மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முதலில் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்ப கற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார்.
எதிர்பாராத ஆபத்தை சமாளிக்க துப்பாக்கியை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். என்று கோபமாக கூறிவிட்டு புறப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு ஏராளமானோர் கேலி கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.இதற்கு உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி கண்டனம் தெரிவித்தது.
அதன்படி ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, " பாஜக ஆட்சியில் ஒரு சப் இன்ஸ்பெக்டருக்கு துப்பாக்கியை கூட பயன்படுத்த தெரியாதது வெட்கக்கேடானது எனவும் இப்படிப்பட்ட காவலர்கள் இருக்கும்போது காவல்துறை சிறப்பாக இருக்குமா" என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க
Crime : நடுரோட்டில் பிரபல நடிகை சுட்டுக்கொலை...வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்...என்ன நடந்தது?