Viral Video : நடுரோட்டில் இருசக்கர வாகனத்தில் இருந்தபடி பெண் குளித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நாடு முழுவதும் கோடை வெயில் மக்கள் வாடி வதைத்து வருகிறது. இதனால் மக்கள்  கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், நடுரோட்டில் இருசக்கர வாகனத்தில் இருந்தபடி பெண் குளித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


அதன்படி, மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் உல்ஹஸ்நகரில் உள்ள சிக்னலில் இருசக்கர வாகனத்தில் ஆண் மற்றும் பெண்ணும் சென்று கொண்டிருந்தனர். அப்போது உல்ஹஸ் நகரில்  உள்ள சிக்னலில் சென்றுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்தபடியே தண்ணீரை தலையில் ஊற்றி குளித்துக் கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.







இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன எண்ணை அடிப்படையாக கொண்டு அதன் உரிமையாளர் மீது அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


இந்த சம்மரில் நீங்கள் எப்படியெல்லம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.


செய்யக்கூடியவை



  • காலையில் எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீரை மொத்தமாக குடிக்கக்கூடாது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் குடிப்பது தான் நல்லது.

  • தண்ணீர் மட்டுமல்ல, ஏதாவது நீர் ஆகாரங்கள் இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை குடித்தால் நல்லது.

  • அதேபோன்று ஜீரணமாகக்கூடிய வேக வைத்த உணவுகளை உண்பது நல்லது. 

  • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இறுக்கமான உடைகளை அணியாமல் காற்றுப் போகும் வகையில் உடைகள் அணிய வேண்டும்.

  • ஷூ, சாக்ஸ், பனியன் போன்றவற்றை 6 மணிமுதல் 8 மணிவரை தான் போட வேண்டும்.

  • வெப்ப அதிகமாக இருப்பதால் தினமும் இரண்டு முறை சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

  • வெயிலின் தாக்கம் கண்ணில் படுவதால் கருவிழிகள் சுருங்கிவிடும். அதனால் பாதுகாப்பான கண்ணாடி அணிய வேண்டும். 

  • வெயிலில் வெளியே செல்லும்போது முகத்தை மூடிக் கொள்வதும், தொப்பி அணிந்து செல்வது, முகத்திற்கு சன்ஸ்கிரீம் பயன்படுத்துவதும் நல்லது.