புது டெல்லியில் அதிவேகத்தில் சென்ற கார் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஓட்டுநர் அதிஷ்டவசமாக பெரிய அளவில் காயங்கள் ஏதுமின்றி தப்பித்துள்ளார். 


டெல்லியில் அதிவேகமாக சென்ற கார்கள் இரண்டும் மோதிகொண்டு விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. புதுடெல்லியில் தெற்கு பகுதியில் உள்ள சி.ஆர். பார்க் பகுதியில் என்.ஆர்.ஐ. மெயின் ரோடில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீதி மோதியதில் விபத்து ஏற்பட்டது.






பலேனோ (Baleno) கார், ஸ்விட் டிசையர் (Swift Dzire) கார் மீது மோதியில் இந்த பெரும் விபத்து ஏற்பட்டது. இதன் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “இவ்வளவு வேகத்தில் யாராவது கார் ஓட்டுவார்களா? அதுவும் குறுகலான, பிஸியாக இருக்கும் சாலையில் அதிவேகத்தில் கார் ஓட்டியிருக்கிறார்களே?” என்று பலரும் கமெண்ட்கள் பதிவிட்டு வருகின்றனர்.


அதிவேகம்:


இந்த விபத்தின் வீடியோவில் கார் அதிவேகத்தில் பயணிக்கும் வீடியோவில் கண்களால் பார்க்க முடியாத அளவிற்கு அதிவேகத்தில் பலேனோ கார் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


இந்த விபத்திற்கு அதிவேகத்தில் வந்த பலேனோ கார்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த 17-வயதுடைய 12-வகுப்பு மாணவர் கல்காஜி பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பெரிதாக காயங்கள் இல்லை என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  பலேனோ மற்றும் ஸ்விட் டிசையர் கார் இரண்டும் விபத்தில் கடும் பாதிக்கப்பட்டது.


ஸ்விட் டிசையர் கார் ஓட்டுநர் கெளவ்ரவ் கூறுகையில், பெலேனோ  கார் அதிவேகத்தில் வந்ததாகவும், தன்னுடைய கார் மீது மோதியதாகவும் தெரிவித்துள்ளார். கெளரவ் (Tughlakabad Extension,) துக்லாபாத் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.




மேலும் வாசிக்க..


Aadhar Pan Link: ஆதார்கார்டுடன் பான் கார்டை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு


ADMK Case: விதியை மீறி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாரா ஓ.பி.எஸ். ? நீதிபதிகள் அளித்த விளக்கம் என்ன?