உத்தர பிரதேச மாநிலம் பிராயக்ராஜில் மகா கும்ப மேளாவில் எப்படியாவது நீராட வேண்டும் என்பதற்காக பக்தர்கள் பல்வேறு வழிகளில் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.இதனால் ரயில் பயணத்திற்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

அந்த வகையில்  வாரணாசி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பயணிகள் ரயில் இன்ஜினில் ஏறி பயணிக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்படியாவது பயணிக்க வேண்டும் என்றஅவசரத்தில், இருக்கைகள் பற்றாக்குறை காரணமாக சில பயணிகள் ரயில் எஞ்சின்களுக்குள் ஏறியுள்ளனர்.  

பயணிகள் என்ஜின் கேபினை வழக்கமான பெட்டியைப் போலக் கருதி, அதில் இருக்கும் அபாயங்களை அறியாமல் இன்ஜினுக்குள் ஏறியுள்ளனர். அந்த பயணிகள் உள்ளே சென்றவுடன்  கதவை உள்ளே இருந்து பூட்டினர். இருப்பினும், ரயில்வே ஊழியர்கள் விரைவாக தலையிட்டு, சுமார் 20 நபர்களையும் என்ஜினிலிருந்து அகற்றி, இன்ஜினில் ஏறிஆக்கிரமித்து பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்தனர். லோகோமோட்டிவ் கேபினிலிருந்து பயணிகளைஅகற்றிய பிறகு, அதிகாரிகள் அவர்களுக்கு மற்ற ரயில் பெட்டிகளில் உட்கார ரயில்வே போலீசார் ஏற்பாடு செய்தனர்.

இதையும் படிங்க: Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்

அதிகரித்து வரும் கூட்ட நெரிசலால், பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், ரயில்களின் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் ஏறி ஆபத்துக்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரயில்வே அதிகாரிகள் பயணிகளை வலியுறுத்தியுள்ளனர். கூட்டத்தை நிர்வகிக்கவும், மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்கவும் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.