மும்பை மாநிலத்தின் போரிவாலி மேற்கு பகுதியில் உள்ள சாய்பாபா நகர் பகுதியில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.


இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அந்த வீடியோவில் பலரும் அலறியடித்து ஓடுவதை பார்க்க முடிகிறது.






இதையடுத்து அப்பகுதிக்கு, குறைந்தது எட்டு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், இரவு 10 மணிக்கு கிடைத்த தகவலின் படி, இந்த விபத்தில் 111 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதில் 88 பேருக்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 23 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.