Watch Video : புத்தம் புது கார்..! பார்க்கிங் பைக்குகள் மீது பாய்ந்த சோகம்..! வைரலாகும் வீடியோ..

புத்தம் புது காரை பார்க்கிங் ஏரியாவில் நின்றிருந்த பைக்குகளில் மோதிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

புத்தம் புது காரை பார்க்கிங் ஏரியாவில் நின்றிருந்த பைக்குகளில் மோதிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஸ்குவாட்ரன் லீடர் வினோத் குமார் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாட் ஏ க்ராண்ட் அரைவல் ஹோம் என்று தலைப்பிட்டுள்ளார்.

Continues below advertisement

அந்த சி.சி.டி.வி. காட்சியில் ஒரு குடியிருப்பு வளாகத்தின் வாயில் கதவை ஒரு நபர் திறக்கிறார். பின்னர் புத்தம் புது டாடா நெக்சான் கார் அந்த வளாகத்திற்குள் நுழைகிறது. அதில் திரும்பும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பகுதியில் பார்க் செய்யப்பட்டிருந்த பைக்குகள் மீது மோதிவிடுகிறது. மோதிய வேகத்தில் பக்கவாட்டில் சரிகிறது,. பதறிப்போன நபரும் கட்டிடத்தின் காவலாளியும் வேகமாக ஓடிவந்து உதவுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன் கீழ் நெட்டிசன்கள் பலரும் பலவகையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்டதில் இருந்து இச்செய்தி பதிவு செய்யப்பட்ட நேரம் வரை 6 லட்சத்து 22 ஆயிரம் பார்வைகளைக் கடந்து 13 ஆயிரம் லைக்குகளையும் தாண்டி பெற்றுள்ளது. ஒரு சிலர் இந்த வீடியோவைப் பார்த்து சிரித்துவைக்க இன்னும் சிலர் ஏன் இந்த விபத்து ஏற்பட்டது என விளக்கி ஆலோசனைகள் கொடுத்துள்ளனர். ஒரு பதிவர், பிரேக்கை அழுத்துவதற்குப் பதிலாக ஓட்டுநர் பதற்றத்தில் க்ள்ட்சையும் ஸ்டீரிங்கையும் இயக்கி ஆக்ஸிலரேட்டரை பிரெஸ் செய்துள்ளார். அவருக்கு சமயோஜித புத்தி செயல்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola