வனத்தினை அழித்து மனிதர்கள் வீடுகளை தங்களது வசதிக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்கின்றனர். ஒரு சிலர் பசுமையான சூழல், தூய்மையான காற்று வேண்டும் என்பது போன்ற காரணங்களுக்காக வனத்தினை அழித்து மனிதர்கள் வசிப்பதற்கான வீடுகளை அமைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் வியாபார நோக்கத்திற்காக காடுகளை அரசு அனுமதித்த அளவில் இருந்தும் அதிகமாக அழித்து சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக ரெசார்ட்டுகளையும், ஹோட்டல்களையும் அமைத்து வருகினறனர். 


ஒரு சில இடங்களில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தளங்கள் போன்றவற்றை அமைக்க வனப்பகுதியில் பெரும்பாலான காடுகளையும் நதிகளையும் அழித்து கட்டிடங்கள் ஏற்பட்டதாக வழக்குகள் கூட நீதி மன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன. மனிதனின் ஆசைக்கு நாள் தோறும் பல்வேறு வன விலங்குகள் அவதிப்பட்டு வருகின்றன. வனப்பகுதியில் வீடுகளையும் ரிசார்ட்டுகளையும் அமைத்துவிட்டு வன விலங்குகள் அத்துமீறி நுழந்து விட்டது என புலம்புபவர்களும், புகார் எழுப்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 


அதே நேரத்தில் சில நேரங்களில் மனிதர்களின் வசிப்பிடங்களுக்கும் வன விலங்குகள் இறை தேடி வருகின்றன. அவ்வாறு வரும்போது, மனிதர்களையும் கால் நடைகளையும் தாக்குகிறது. இந்நிலையில், மகாராஸ்ட்ரா மாநிலத்தில் ஒரு குடும்பத்தினருக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. 






தசரா விழாவின் கொண்டாட்டங்களுக்குச் சென்று விட்டு இரவு கால தாமதமாக வீட்டிற்குத் திரும்பிய குடும்பத்தினரை வரவேற்க சிறுத்தை புலி காத்திருந்தது. திடீரென சிறுத்தையினை கண்ட குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியில் இருந்த ஒரு அறையிக்குச் சென்று பாதுகாப்பாக இருந்து விட்டனர். பின்னர் சிறுத்தையின் நடமாட்டத்தினை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போதுப் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


திறந்திருக்கும் வீட்டிற்குள் செல்லும் அந்த சிறுத்தை வீட்டில் இருந்து வெளியில் வந்து, வீட்டில் வளர்க்கும் நாய் போல வீட்டின் வாசலில் அமர்ந்து வீட்டு முதலாளிகளுக்கு காத்திருப்பது போல வாசலையே பார்த்து அமர்ந்து இருந்தது. பின்னர் வீட்டின் எதிர் அறையில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட சிறுத்தை அந்த அறையையே முறைத்து பார்த்தபடி நீண்ட நேரம் அமர்ந்திருந்தது. அந்த வீட்டில் ஒரு பச்சிளம் குழந்தையும் இருப்பதாக கூறப்படுகிறது. தசரா கொண்டாட்டத்திற்கு குடும்பத்தினர் குழந்தியுடன் சென்றதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என கூறபடுகிறது. சிறுத்தை நடமாற்றம் குறித்து மகாராஷ்ட்ரா காவல் துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாற்றத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.