மதில் சுவரைத் தாண்டி வீட்டுக்குள் செல்லும் பிரமாண்ட மலைப்பாம்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வன அதிகாரி பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் உள்ள மலைப்பாம்பு அனகோண்டா போல் காட்சியளிக்கிறது.
இணையத்தில் அவ்வப்போது உலகம் முழுவதும் நடக்கும் அபூர்வ மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் வைரல் ஆவது வழக்கம். அதேபோல் இம்முறை இந்திய வன அதிகாரி சுஷந்தா நந்தா பகிர்ந்துள்ள ஒரு விடியோவில் , பிரமாண்ட மலைப்பாம்பு ஒன்று ஒரு வீட்டின், மதில் சுவரினைக் கடந்து வீட்டிற்குள் சென்று கொண்டு உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் பயத்தினை உண்டு செய்யக்கூடிய அளவிற்கு அந்த மலைப்பாம்பும், அந்த வீடியோ காட்சியும் இருக்கிறது.
இந்த வீடியோவோடு வன அதிகாரி சுஷந்தா நந்தா குறிப்பிட்டுள்ளது, நான் எத்தனையோ எடிட்டேட் விடியோக்களை பார்த்திருக்கிறேன். ஆனால், இது பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக உள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.
Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், இந்த வீடியோவில் உள்ள பாம்பு உண்மைதான என சிலரும், இது மலைப்பாம்பு அல்ல அனகோண்டா எனவும் மிகப் பெரிய அளவுடைய ரெட்டிகுலேடெட் மலைப்பாம்பு என சிலரும் கூறி வருகின்றனர். இது வரை இந்த வீடியோவை சுமார் 55,000 இணையவாசிகள் பார்த்துள்ளனர். மேலும், 2,000 இணையவாசிகள் லைக் செய்துள்ளனர். மலைப்பாம்பு செல்லும் வீட்டின் வாசலில் ஒரு பைக் மற்றும் ஒரு சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 17 நொடிகள் உள்ள இந்த வீடியோ பாம்பின் வால் முதல் தலை வரை கவர் செய்யும் படியான விடியோவாக உள்ளது. கடந்த மாதம் ஃபுளோரிடாவில் பிரமாண்ட பர்மிய மலைப்பாம்பு வன அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. இந்த மலைபாம்பு கடைசியாக ஒரு வெள்ளை மானை உண்டிருக்கிறது எனவும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்