தமிழ்நாடு:



  • சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை.

  • தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள் வரும் 18ஆம் தேதி விடுமுறைக்கு பிறகு திறக்கப்படும் என்று அறிவிப்பு.

  • கடலூர் மாவட்டத்தில் 25 மீனவர்களுக்கு சலுகை ரத்து என்று மீன்வளத்துறை அறிவிப்பு.

  • ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது. 

  • கோவை,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்தியா:



  • ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்கி வருவதாக பிரதமர் மோடி பேச்சு

  • ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு தொடர்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு.

  • நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பாக வரும் 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்ட உள்ளதாக தகவல்.

  • மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

  • ஆன்லைனில் பொது தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தகவல்.

  • குஜராத்தில் வதோதரா பகுதியில் ரயில் பாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் சேவை ரத்தாகியுள்ளது. 


உலகம்:



  • இலங்கை அதிபர் கோட்டபய வெளிநாடு தப்பி சென்றுள்ளதாக தகவல்.

  • இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்க உள்ளதாக தகவல்.

  • இலங்கைக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி செய்யும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்.

  • இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்.

  • ட்விட்டரை வாங்க மறுத்த எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


விளையாட்டு:



  • இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

  • செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 90% ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண