அடுத்த ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளி நம்பர் ஒன் இடத்திற்கு இந்தியா முன்னேறும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.
ஐநா அறிக்கை:
தற்போது உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 142 கோடியே 60 லட்சம் பேர் அந்நாட்டின் மக்கள் தொகையாக இருப்பார்கள். இந்த அளவை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் இந்தியா தாண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. ஐநா அமைப்பின் உலக மக்கள் தொகைக் கணிப்பின் படி இந்த ஆண்டில் உலக மக்கள் தொகை 8 கோடியை தாண்டும் என்றும் மக்கள் தொகை சரிவில் நாடுகள் உள்ள போதும் இந்த அளவை தாண்டும் என்றும் ஐநா கூரியுள்ளது. உலக மக்கள் தொகை வாய்ப்பு 2022னை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக உறவுகள் அமைப்பு நேற்று இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சீனாவின் 142.60 கோடி மக்கள் தொகையை அடுத்த 2023ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி 142.80 கோடி மக்கள் தொகையை இந்தியா தாண்டும் என்று கூறியுள்ளது. மேலும் இதே வேகத்தில் சென்றால் 2064ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 169.7 கோடியை தாண்டி உச்சத்தை அடையும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
குறையும் உலக மக்கள் தொகை:
இந்த அளவானது 2100ம் ஆண்டில் 153 கோடியாக குறையும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. மேலும் , சீனாவின் மக்கள் தொகை கடந்த 2021ம் ஆண்டில் 142.5 கோடியாக உயர்ந்து உச்சத்தைத் தொட்டுவிட்ட நிலையில், இனி சரிவை சந்திக்கும் என்று கூறியுள்ளது. 2100ம் ஆண்டிற்குள் சீனாவின் மக்கள் தொகை 77 கோடியாக இருக்கும் என்று ஐநா அறிக்கை கூறியுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவின் மக்கள் தொகை 141.2 கோடியாக இருக்கிறது. “விரைவான மக்கள்தொகை வளர்ச்சியானது வறுமையை ஒழிப்பது, பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவது மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்புகளின் பாதுகாப்பை அதிகரிப்பது போன்றவற்றை மிகவும் கடினமாக்குகிறது. மாறாக, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது, குறிப்பாக சுகாதாரம், கல்வி மற்றும் பாலின சமத்துவம் தொடர்பானவை, கருவுறுதல் அளவைக் குறைப்பதற்கும் உலகளாவிய மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைப்பதற்கும் பங்களிக்கும்” என்று பொருளாதார மற்றும் சமூக உறவுகள் அமைப்பு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உலக மக்கள் தொகை சரிவை சந்திக்கத் தொடங்கிவிட்டாலும் இந்த ஆண்டின் நவம்பர் 15ம் தேதியில் உலக மக்கள் தொகை 800 கோடியைத் தாண்டும் என்றும், 900 கோடி மக்கள் தொகையை 2038ல் அடையும் என்றும் ஐநா அமைப்பு கூறியுள்ளது. 100 கோடி மக்கள் தொகையை அடைவதற்கு உலகிற்கு எடுத்துக்கொள்ளும் மிக நீண்ட காலம் 1950க்குப் பிறகு இது தான் என்று அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.
பெரும் பணக்கார நாடுகள்:
2050களில் ஆப்ரிக்கா மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளின் சதவீதம் 5% அளவிற்கு உயர்ந்து 20 சதவீதத்தை அடையும் என்றும், அதே நேரத்தில் ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்க பகுதிகள் உலகின் பணக்கார பகுதிகளாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. உலக அளவில் பொருளாதார சமமின்மை பிரச்சனை கணிசமான அளவிற்கு உயரும் என்றும் ஐநா அறிக்கை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.