சிலர் காதல் கைக்கூடினால் பார்ட்டி தருவார்கள் . அதே போல திருமணத்திற்கு முன்பு பேச்சுலர் பார்ட்டி , திருமணத்திற்கு பிறகு பார்ட்டி , குழந்தை பிறந்தால் பார்ட்டி என பல வகையில் கொண்டாடுவார்கள் . அன்றாட வாழ்க்கையின் அடுத்தடுத்த சுப நிகழ்வுகளை நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுவதற்கான தருணம்தான் பார்ட்டி முறை. ஆனால் இங்கு ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து பிரேக் அப் பார்ட்டியை கொண்டாடியிருக்கிறார்.
பிரேக் அப் பார்ட்டி :
பொதுவாகவே காதல் தோல்வி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வலிகள் நிறைந்த பக்கமாக இருக்கும் . சிலருக்கு காதலித்தவர் பிரிந்து சென்றது கடினமாக இருக்கும் என்றால் சிலருக்கு இப்படியானவரை காதலித்துவிட்டோமே என வருத்தமாக இருக்கும் . அது எப்படியோ வலி ஒன்றுதானே ! காதல் தோல்வியடைந்தவர்கள் விரக்தியில் இருப்பார்கள் , தனிமையை விரும்புவார்கள் . ஆனால் இங்கு அமித் என்னும் நபர் அத்தனையையும் முறியடிக்கும் விதமாக நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி வைத்து கொண்டாடியிருக்கிறார்.பீகாரின் சமஸ்திபூரில் இப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.
திருமண நிகழ்வு போல கொண்டாடிய காதலன் :
பீகாரை சேர்ந்த அமித் காதல் தோலிவியால் ஏற்பட்ட வலியை போக்க நண்பர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார். புகைப்பட கலைஞர்கள் , டிரோன் வீடியோக்கள் , உணவு மற்றும் மது விருந்து , ஆட்டம் பாட்டம் என திருமண கொண்டாட்டம் போல அமர்களமாக சென்றிருக்கிறது அந்த பார்ட்டி . மேலும் காதல் தோல்வியில் இருந்த அமித் துப்பாக்கியால் கேக்கை வெட்டுகிறார். கேக்கில் அமித் மற்றும் நிஷா பிரேக் அப் டே என குறிப்பிடப்பட்டிருக்கிறது.மஸ்திபூர் மாவட்டத்தின் வித்யாபதிநகர் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள மணியார்பூர் கிராமத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.