தமிழ்நாடு:



  • குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

  • துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

  • அதிமுக விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

  • காவலர்களுக்கு விடுமுறை அளிக்கும் புதிய உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

  • சென்னை வடபழனியில் நிதி நிறுவனத்தில் 30 லட்சம் ரூபாய் கொள்ளை.

  • பாஜக மகளிர் அணியின் மூன்று பேரை 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு.

  • ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இந்தியா:



  • திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு டிக்கெட்டுகள் விற்பனை இன்று தொடக்கம்.

  • ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

  • ஆர்சு மானியம் மற்றும் சலுகைக்கு ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • புதிய பாடத்திட்டம் தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று

  • பீகார் அரசியல் குறித்து அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.

  • நாடு முழுவதும் நான்காம் கட்ட க்யூட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. 

  • குஜ்ராத்தில் 1026 கோடி போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

  • ஒடிசாவில் கனமழை காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

  • காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஒரு பண்டிட் உயிரிழந்துள்ளார்.


உலகம்:



  • பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் உரையாடல் நடத்தினார்.

  • அமெரிக்காவில் நீண்ட தூர ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. 

  • ஸ்பெயினில் 1000 கணக்கான ஏக்கர் பரப்பளவில் காட்டு தீ பரவி வருவதால் பலர் வீடுகளில் தஞ்சம்.

  • தைவான் விவகாரத்தில் சீனா பொருளாதார தடையை விதித்துள்ளது. 

  • நிதி முறைக்கேடு விவகாரத்தில் மலேசிய முன்னாள் பிரதமரின் கோரிக்கை ஏற்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

  • உக்ரைன் அதிபர் ஸ்லென்ஸ்கியுடன் ஐ.நா பொது செயலாளர் நாளை சந்திப்பு நடைபெற உள்ளது.


விளையாட்டு:



  • ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகல்.

  • ஜிம்பாவே அணிக்கு எதிரான தொடருக்கான அணியில் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண