மலைப் பகுதியில் மிக அபாயகரமான சாலையில், கார் ஓட்டுநர் தனது வாகனத்தை லாவகமாக திருப்பும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் அஜயித்தா என்பவர் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், நேர்த்தியான 80 பாயிண்ட் டெர்ன் என்றும் வர்ணித்துள்ளார்.
வீடியோவில், மிகவும் குறுகலான மற்றும் அபாயகரமான அந்த சாலையில் ஓட்டுநர் ஒருவர் தனது காரை திருப்ப முயற்சிக்கிறார். back-ல் ரிவர்ஸ் எடுக்காமல், இருந்த இடத்திலேயே, அதுவும் குறுகலான சாலையில் வண்டியை திருப்பவும் முயற்சிக்கிறார். இது, மிகவும் கடுமையான சவாலாகும். ஏனெனில், சிறிது தவறு நடந்தாலும், மலை பள்ளத்தாக்கில் விழ நேரிடும். பின் தனது கடின முயற்சிக்குப் பிறகு, வெற்றிகரமாக தனது காரை திசை திருப்பி ஓட்டிச் செல்கிறார். கார் ஓட்டுவதில் திறன் வாய்ந்த ஒருவரால் மட்டுமே இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
இந்த வீடியோவை ட்விட்டரில் மட்டும் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். பலரும், கார் ஓட்டுநரின் அசாத்திய திறமையை பாராட்டினாலும், சிலர் இத்தகையை முயற்சிகளை சாமானிய மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர்.
இப்படி, சாலையின் நட்டநடுவில் நின்று கொண்டு 80' கோணத்தில் வண்டியை திருப்புவதற்கு பதிலாக, ஓட்டுநர் தனது காரை ரிவர்ஸ் எடுத்திருக்கலாம் என்றும் ஒரு ட்விட்டர் பயணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Dhoni New Ad Video: ஒரே வீடியோவில் வாழ்க்கை தத்துவத்தை சொன்ன தோனி..நெகிழ்ந்துபோன சேவாக் - வீடியோ!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்