திருமணங்கள் என்றால் அனைத்து நாடுகளில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். அதிலும் குறிப்பாக  இந்தியாவில் திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கொண்டாட்டமாக இருக்கும். அங்கு மூன்று நாட்களுக்கு மேலாக பல திருமண சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கம். இதன்காரணமாக திருமணங்கள் எப்போதும் நீண்ட நேரம் நடைபெறும். 


அப்படி ஒரு திருமணம் தொடங்கி ஒருநாள் முடிந்து அடுத்த நாள் காலை வரை ஒரு இடத்தில் நடந்துள்ளது. இந்த நேரத்தில் மணமகள் செய்த காரியம் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி, அந்தப் பெண்ணின் திருமணம் முதல் நாள் இரவு தொடங்கியுள்ளது. அதன்பின்னர் நிறையே சடங்குகள் இருந்ததால் அவரின் திருமணம் அடுத்த நாள் காலை 6.30 மணி வரை நடந்துள்ளது. 






இதனால் அந்த வீடியோவில் மணமகள் மணமேடையில் தூங்கிக்கொண்டு சடங்குகளை செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பலரும் பார்த்து சிரித்து வருகின்றனர். அத்துடன் திருமணங்களில் இனிமேலாவது சில சடங்குகளை நிறுத்தவேண்டும் என்றும் ஒரு சிலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: உலகிலேயே அதிகமான பெண் பைலட்டுகள் இருப்பது இந்த நாட்டில்தான்.. முழு விவரம்..