ஃபாக்ஸ் ஆபிஸ் எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்புள்ள படங்கள் வெளியாகும் போது, எதிர்பார்க்கப்படும். அந்த எதிர்பார்ப்பிற்கு காரணம், வசூல் மீதான எதிர்பார்ப்பு. ஏன் இந்த எதிர்பார்ப்பு... எதனால் இந்த எதிர்பார்ப்பு? தயாரிப்பாளர் எதிர்பார்க்க வேண்டிய லாபத்தை, சாதாரண ரசிகன் ஏன் எதிர்பார்க்கிறான்? அந்த எதிர்பார்ப்பின் பின்னணியில் இருக்கும் எதிர்பார்ப்பு என்ன? ஒரு எதிர்பார்ப்பிற்கு இத்தனை எதிர்பார்ப்பு தேவையா... என நீங்கள் கேட்பது இங்கே கேட்கிறது... சரி விடுங்க... உங்க எதிர்பார்ப்பிற்கு வருவோம், இது வலிமை எதிர்பார்ப்பு. என்ன வசூலித்திருக்கிறது என்கிற எதிர்பார்ப்பு. இதோ அந்த விபரத்தை தருகிறோம்... நீங்கள் எதிர்பார்த்தது நடந்திருக்கிறதா என்பதை நீீங்களே எதிர்பார்த்துக் கொள்ளுங்கள்!!!


திரைப்படம் உலக வசூல் இந்திய வசூல்

வெளிநாடு வசூல்

வெளியான தேதி ஸ்கிரீன்ஸ்
கங்குபாய் கதியவாடி ரூ.62 கோடி ரூ.46.15 கோடி ரூ.15.85 கோடி பிப்ரவரி 25 889(மும்பை)
பீம்லா நாயக் ரூ.110 கோடி ரூ.89.4 கோடி ரூ.20.6 கோடி பிப்ரவரி 25 652(ஐதராபாத்)
ஆஜா செக்சிகோ ரூ.1.35 கோடி ரூ.1.35 கோடி ரூ.0 பிப்ரவரி 25 96(சண்டிகர்)
வலிமை ரூ.123.7 கோடி ரூ.92.7 கோடி ரூ.31 கோடி பிப்ரவரி 24 370(சென்னை)
பன்கிண்ட் ரூ.19 கோடி ரூ.19 கோடி ரூ.0 பிப்ரவரி 18 321(மும்பை)
அன் சார்ட்டட் ரூ.1100 கோடி ரூ.10.8 கோடி ரூ.670 கோடி பிப்ரவரி 18 27(மும்பை)
ஆரட்டு ரூ.20.15 கோடி ரூ.13.15 கோடி  ரூ.7 கோடி பிப்ரவரி 18 36( கொச்சி)
டிஜே டில்லு ரூ.21 கோடி ரூ.17.8 கோடி ரூ.3.2 கோடி பிப்ரவரி 12 56(ஐதராபாத்)
பதாய் டூ ரூ.23 கோடி ரூ.20 கோடி ரூ.3 கோடி பிப்ரவரி 11 27(மும்பை)

ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான வலிமை திரைப்படம், தற்போது வரை ரூ.123 கோடி வசூலை எட்டியுள்ளது. இதன் எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளது. இது தவிர ஓடிடி உரிமம், சாட்டிலைட் உரிமம் என இதர உபரி வருவாய் வேறு உள்ளது. இத்தனையும் கடந்து செலவழித்த தொகையை மீட்குமா வலிமை, போட்டதை விட அள்ளுமா என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.