ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ஓட்டலில் அதிகாலையில் திடீரென்று புகுந்து சோதனை நடத்தினர்.


இந்த சோதனையில், போதை விருந்தில் பங்கேற்ற 90 இளைஞர்கள், 38 இளம் பெண்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 150 பேர் சிக்கினர். இவர்களில் பலர் தொழில் அதிபர்களின் மகன், மகள்கள் என்பது தெரியவந்தது. அனைவரும் கைது செய்யப்பட்டனர். 


இதில், நடிகர் நாக பாபுவின் மகளும், மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மருமகளுமான நிஹாரிகா கொனிடேலா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும், தமிழில் விஜய் சேதுபதி மற்றும் கெளதம் கார்த்தி இணைந்து நடித்த "ஒரு நல்லநாள் பார்த்து சொல்லு" திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். கைதானவர்களிடம் இருந்து கொகைன் போதை பொருள்கள் கைப்பற்றப்பட்டனகைதானவர்களின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் போதை பொருள் பயன்படுத்தியவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர். 






இதுகுறித்து, நடிகர் நாக பாபு தனது மகளுக்கு போதைப்பொருளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். 






மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பாடகரும், பிக் பாஸ் தெலுங்கு ரியாலிட்டி ஷோவில் மூன்றாவது சீசனின் வெற்றியாளருமான ராகுல் சிப்ளிகுஞ்சும் ஒருவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சிப்ளிகுஞ்சு கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி ஹைதராபாத் காவல்துறை போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கியபோது அவர் தீம் பாடலைப் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


விருந்தில் இருந்த மற்றவர்களில் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு உயர் போலீஸ்காரரின் மகளும், அம்மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி.யின் மகனும் இருந்ததாகவும் தெரிகிறது. தற்போது இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண