தமிழ்நாடு:
- முதலீட்டார்களின் முதல் மாநிலமாக தமிழ்நாடு ஆகும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் இதுவரை அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு.
- அனைவருக்கும் தடுப்பூசி என்ற உத்தரவை தமிழ்நாடு சுகாதாரத்துறை வாபஸ் பெற்றுள்ளது.
- தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் +2 கணித தேர்வு வினாத்தாள் இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல்.
- தமிழ்நாட்டில் ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் தேதி திமுக சார்பில் பட்ஜெட் பொதுவிளக்க கூட்டம் செங்கல்பட்டில் நடைபெறுகிறது.
இந்தியா:
- இந்தியாவின் ஏஏறுமதி 417.8 டாலர்களாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தகவல்.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயால் தெரிவித்துள்ளார்.
- இந்திய ராணுவப் படை தளபதில் 3 நாட்கள் பயணமாக இன்று சிங்கப்பூர் செல்கிறார்.
- நாட்டிலுள்ள 12 மருத்துவ கல்லூரியில் சுகாதாரத்துறை அமைத்த குழு திடீர் ஆய்வு.
- ஹைதராபாத் பிரபல நட்சத்திர விடுதியில் போதை பொருட்கள் சிக்கியுள்ளன.
- ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் இன்று உதயமாகிறது.
- பெண்களுக்கு மரியாதை தரும் சமூகம் தான் சிறந்து விளங்கும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உலகம்:
- ரஷ்ய தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் போலந்து சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
- இலங்கையின் பிரதமர் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
- பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு புதிய சபாநாயகரை நியமித்து எதிர்க்கட்சியினர் உத்தரவிட்டுள்ளனர்.
- பாகிஸ்தான் பிரதமர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்