தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் வீட்டுக் கடன் வழங்கும் ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபினான்ஸ் கார்ப்பரேசன் (Housing Development Finance Corporation (HDFC) ), ஹெச்.டி.எஃப்.சி. இவெஸ்மெண்ச் லிமிடட் ( HDFC Investments Limited) மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஹோல்டிங்ஸ் ( HDFC Holdings Limited) ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்படும் என்றும் ஹெச்.டி.எஃப்.சி குழுமம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபினான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் 41 சதவீத பங்குகளை பெற உள்ளது. ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபினான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி வங்கி உடன் இணைப்பு வரும் 2024 ஆம் நிதியாண்ற்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 ஹெச்.டி.எஃப்.சி பங்குகளுக்கு 42 ஹெச்.டி.எஃப்.சி வங்கி பங்குகள் அடிப்படையில் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ரீடைல் பங்கு தாரர்களுக்கும் ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி இணைப்பிற்குப் பின்பு பங்குகள் பரிமாற்றம் செய்யப்படும்.
மேலும் ஹெச்.டி.எஃப்.சி வங்கியிடம் 6.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது. இந்த இணைப்பு மூலம் இந்நிறுவனங்களின் மதிப்பு உயர்வது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பும் அதிகரிக்கும்.
ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்திடம் 6.23 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியிடம் 19.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது.
ஹெச்.டி.எஃப்.சி இணைப்பு அறிவிப்பு வெளியான நிலையில் ஹெச்.டி.எஃப்.சி பங்குகள் 15 சதவீதமும், ஹெச்.டி.எஃப்.சி வங்கி பங்குகள் 13.56 சதவீதமும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, வர்த்தக உயர்வின் மூலம் இரு நிறுவனப் பங்குகளும் 52 வார உயர்வை எட்டியுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் வீட்டு கடன் சேவை இல்லை. ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனமும் தனியாக இயங்கி வருதால குறைந்த வாடிக்கையாளர்களையே கொண்டிருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த முடிவின் மூலம் லோன் வழங்குவது மற்றும் வீடூ கடன்களை வழங்குவதை அதிகரிப்பது மற்றும் கிரெடிட் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும். என்று ஹெச்.டி.ஃஎப். சி. லிமிடட் நிறுவன தலைவர் தீபக ப்ரேஷ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்