உணவு டெலிவரி செய்த Zomato ஊழியரை பெண் ஒருவர் காலணிகளால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸொமோட்டோ ஊழியரை ஷூவால் அடித்த பெண் :
கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி Dj என்னும் ட்விட்டர் பயனாளர் ஒருவர் தனது பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் பெண் ஒருவர் ஸொமாட்டோ டெல்வரி ஊழியரிடம் ஏதோ கடுமையாக பேசுகிறார். சில வினாடிகளில் காலில் போட்டிருந்த ஷூவை எடுத்து அந்த டெலிவரி ஊழியரை இரண்டு முறை அடித்துவிட்டு மீண்டும் காலில் ஷூவை போட்டுக்கொண்டு , தன்னுடன் வந்த தோழியுடன் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். சம்பந்தப்பட்ட ஊழியர் எதுவும் பேசாதவராய் , பயந்தவராக கைகளை கட்டிக்கொண்டு நின்றுக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என தெளியவாக தெரியவில்லை என்றாலும் கூட பெங்களூருவாக இருக்கலாம் என்கின்றனர் சிலர்.
காரணம் என்ன ?
இந்த சம்பவம் பதிவரின் முன்னிலையில்தான் நடந்திருக்கிறது. இது குறித்து அவர் கூறுகையில் “நான் எனது உணவை வாங்குவதற்காக அங்கு வந்தேன். அப்போது அந்த பெண் உணவை வாங்கிக்கொண்டு, அவரை காலணிகளால் அடிக்க துவங்கிவிட்டார். இதனை அங்கிருந்தவர்கள் நல்ல வேலையாக வீடியோ எடுத்தார்கள் ” என்றார். ஸொமாட்டோ டெலிவரி பாய் வேறு ஒருவருடைய உணவை அந்த பெண்ணிற்கு கொடுத்துவிட்டார். அதற்கான பில் வேறு என்பதால், அதனை காட்டி பணம் கேட்டிருக்கிறார். அதனால் அந்த பெண் காலணிகளை கழற்றி அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு டெலிவரி ஊழியர், பதிவிட்டவரின் அறைக்கு சென்று கதறி அழுததாகவும், தன் வேலை போய்விடும் என பயந்ததாகவும் Dj தெரிவித்திருக்கிறார்.
ஸொமோட்டோ பதில்:
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ஸொமாட்டோ நிறுவனம் , பகிர்ந்ததற்கு நன்றி . நாங்கள் இதனை சரிப்பார்க்கிறோம் என கமெண்ட் செய்துள்ளது. அதனை தொடர்ந்து பதிவிட்டவரை தொடர்புக்கொண்ட ஸ்மோட்டோ கஸ்டமர் கேர் சர்விஸ் , அவரது ஆடர் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த டிஜே, “என் ஆடரை பற்றி எனக்கு கவலை இல்லை. அவரை தகாத முறையில் தாக்கியிருக்கின்றனர் . அதற்கான நடவடிக்கை எடுங்கள் “ என கேட்டிருக்கிறார். அதற்கு ஸொமாட்டொ கஸ்டமர் கேர் நிறுவனம் அதற்கு அவர் ரைடர் கஸ்டமர் கேரை தொடர்புக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கின்றன. ஆனால் ரைடர் கஸ்டமர் கேரில் பேசியவர்களுக்கு கன்னடம் தெரியவில்லை என்கிறார். இந்த வீடியோவில் காலணிகளை கழற்றி அடிக்கும் பெண்ணுக்கு எதிராக நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.