உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் தலைமை காவலர் ஒருவர் போலீஸ் உடையுடன் ஒரு பெண்ணை கட்டிபிடித்து ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பங்கர் மாவ் கோட்வாலி என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் தீப்சிங் தான் காவலர் உடையில் இந்த மோசமான செயலில் ஈடுப்பட்டுள்ளார். கடந்த திங்கள்கிழமை பிற்பகல் சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், காவலர் சீருடை அணிந்திருந்த தீப்சிங், ஒரு இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி, பூட்டப்பட்ட  அறையில் ஆபாசமான செயல்களைச் செய்கிறார். 


இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து உத்தரப்பிரதேச உயரதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். முதற்கட்ட விசாரணையில் காவலர் சீருடையில் இருந்தவர் தலைமை காவலர் தீப் சிங் என அடையாளம் காணப்பட்டார்.


மேலும், இந்த செய்தி குறித்து அறிந்த உன்னாவ் காவல் கண்காணிப்பாளர் (SP) தீப் சிங்கை உடனடியாக இடைநீக்கம் செய்து அவர் மீது துறைரீதியான நடவடிக்கையைத் எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வீடியோ இரண்டு வருடங்கள் பழமையானது என்றும், அந்த வீடியோ தற்போது அந்த பெண்ணால் வைரலாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  கங்காகாட் கோட்வாலியில் தலைமை காவலர் தீப்சிங் பணியமர்த்தப்பட்டபோது, ​​அவர் அந்த பகுதியில் வசித்து வந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பல முறை அத்துமீறியுள்ளார். சம்பந்தப்பட்ட அந்த பெண்ணே தீப் சிங்கிற்கு தெரியாமல் மறைமுகமாக கேமராவை வைத்து எடுத்துள்ளார். அந்தப் பெண் யார் எதற்காக அவர் தலைமை காவலருடன் உல்லாசமாக இருக்கும் போது அவரே வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். 


ஆனால், தற்போது ஏன் இந்த வீடியோவை அந்த பெண் வெளியிட்டுள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.