Viral Video: பீகாரில் தனது இரண்டு குழந்தைகளை காப்பாற்ற, உயிரை பணயம் வைத்த தாய் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய தாய்:
பீகார் மாநிலம் பார்ஹ் ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை தனது இரண்டு குழந்தைகளுடன் ஒரு பெண் நின்றுக் கொண்டிருந்தார். இவர் பெகுசராய் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு செல்வதற்காக பார்ஹ் ரயில் நிலையத்திற்கு வந்தார். இந்த பெண், தனது குடும்பத்தினருடன் பர்ஹில் ரயிலில் ஏறுவதற்கு நடைமேடையில் நின்றுக் கொண்டிருந்தார்.
விடுமுறை நாட்கள் என்பதால் பார்ஹ் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. நடைமேடையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. இதனால், அந்த பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார். அந்த நேரத்தில், ரயில் ஒன்று வேகமாக வந்துக் கொண்டிருந்தது. அப்போது, தனது இரண்டு குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, தரையுடன் ஒட்டி படுத்திருந்தார்.
இரண்டு குழந்தைகளை கட்டி அணைத்துக் கொண்டு, குழந்தைகள் மீது படுத்திருந்தார். ரயிலும் கடந்து சென்றது. ரயில் அங்கிருந்து கடந்து சென்றதும், அந்த பெண்ணையும், இரண்டு குழந்தைகளையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தில் இருந்த சிறு கற்கள் தாக்கியதில் பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
வைரல் வீடியோ:
அந்த வீடியோவில், ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, நிலை தடுமாறி இரண்டு குழந்தைகளும், ஒரு பெண்ணும் தண்டவாளத்தில் விழுந்துள்ளனர். அந்த நேரத்தில், ரயில் அவரை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
அப்போது, தரையில் ஒட்டியப்படி இரண்டு குழந்தைகளை கட்டிப் பிடித்து, அவர்கள் மீது படுத்துக் கொண்டார். தனது இரு குழந்தைகள் தெரியாமல் கூட எழுந்துவிடக் கூடாது என்பதால், அவர்களை கவசம் போல அரவணைத்துப் படுத்துள்ளார். அந்த ரயில் கடந்து சென்றதும், அங்கிருந்த பயணிகள் குழந்தைகள் மற்றும் அந்த பெண்ணை மீட்டுள்ளது போன்று காட்சிகள் உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தனது இரண்டு குழந்தைகளை காப்பாற்ற உயிரை பயணம் வைத்து சாதுர்யமாக தாய் செயல்பட்டதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க
மசூதியில் முன்னாள் காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்: காஷ்மீரில் பதற்றம்