இந்தியாவில் ரயில் பயணத்தின் நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்னை நம்முடைய டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருந்து கன்ஃபார்ம் ஆகாதது தான். அப்படி ஒருவேளை கன்ஃபார்ம் ஆகியிருந்தாலும் அது ஆர்ஏசி ஆக இருந்தால் நாம் இன்னொருவருடன் பெர்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அது நமக்கு மிகவும் கடினமாக இருக்கும். அப்படி இருக்கும் போது ஒருவர் செய்துள்ள சம்பவம் மிகவும் வேடிக்கையாக அமைந்துள்ளது. 

Continues below advertisement

இது தொடர்பாக ஒரு மீம்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், ஒருவர் தனக்கு ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் ஒரு செயலை செய்துள்ளார். அதாவது அவர் ரயிலில் உள்ள இரண்டு பெர்த்களுக்கு நடுவில் ஒரு துணியை கட்டி தொட்டில் மாதிரி ரெடி செய்துள்ளார். பின்னர் அந்தத் தொட்டிலில் அவர் ஏறி படுக்கும் போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நபரின் செயலை அந்த வீடியோவில் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர். 

 

Continues below advertisement

இந்த வீடியோவை தற்போது வரை பலரும் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவை 75ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து உள்ளனர். அத்துடன் பலரும் சிரிக்கும் வகையில் இந்த வீடியோ தொடர்பாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க: ரயில் வரும்போது ரீல்ஸ்! அடித்துத் தூக்கிய ரயில் : பதைபதைக்க வைக்கும் வீடியோ!