உணவு தொடர்பான வீடியோ என்றால் பெரும்பாலும் சமூகவலைதளங்களில் மிகவும் எளிதாக வைரலாகிவிடும். அதிலும் குறிப்பாக தென்னிந்திய உணவு தொடர்பான வீடியோ என்றால் அது வட இந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிடும். அந்தவகையில் தற்போது தென்னிந்திய உணவில் முக்கியமான உணவான இட்லி தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அப்படி அந்த வீடியோ வைரலாக காரணம் என்ன?
இந்த உணவு தொடர்பாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், “ஒருவர் முதலில் கருப்பு நிறத்தில் உள்ள மாவு ஒன்றை ஒரு இட்லி கொப்பறையில் உற்றி வைக்கிறார். அது நன்றாக ஆவியுடன் நன்றாக வேக வைக்கிறார். அதன்பின்னர் அந்த கருப்பு நிற இட்லியை எடுத்து தட்டில் வைத்து மிளகாய் பொடி மற்றும் சட்னி ஆகியவை வைத்து பரிமாறும் வகையில் காட்சிகள்” இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவை பதிவிட்டவர் இந்த உணவு நாக்பூர் பகுதியில் உள்ள ஒரு வாக்கிங் தெருவில் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த உணவு காலை 6.30 மணியிலிருந்து கிடைக்கும் என்று கூறியுள்ளார். இந்த கருப்பு இட்லியை பதிவு செய்து அது குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றதில்லை என்றும் நக்கலாக கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை தற்போது வரை பலரும் பார்த்து வியந்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: “தேர்தல் நேரத்தில்தான் பாஜகவினர் கங்கையில் நீராடுவார்கள்” - மம்தா பானர்ஜி சாடல்