சமூக வலைதளங்களில் உணவு தொடர்பான வீடியோக்கள் வேகமாக வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக அந்த உணவு பொருள் சற்று வித்தியாசமாக இருந்தால் அது நிச்சயம் வைரலாகும். அந்தவகையில் தற்போது ஒரு உணவு பொருள் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அது வைரலாக காரணம் என்ன?
90 கிட்ஸ்களுக்கு எப்படி பார்லே ஜி மற்றும் டைகர் பிஸ்கேட் பிடிக்குமோ அந்த மாதிரி சமீபத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது ஓரியோ பிஸ்கேட். இந்த பிஸ்கேட்டை பல்வேறு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த பிஸ்கேட்டை வைத்து கடை ஒன்று பக்கோடா தயாரித்து வருகிறது. அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
அதன்படி முதலில் பஜ்ஜி மாவை தயார் செய்கின்றனர். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்க்கின்றனர். அதன்பின்னர் ஓரியோ பிஸ்கேட்களை அந்த மாவு கலவையில் முக்கி எடுக்கின்றனர். அதன்பின்பு அதை எண்ணெயில் பொறித்து எடுக்கின்றனர். அப்போது சவையான ஓரியோ பக்கோடா ரெடியாகவிடுகிறது.
இந்தப் பக்கோடா 100 கிராமின் விலை 20 ரூபாயாக உள்ளது. இந்த ஓரியோ பக்கோடா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் ஒரு கடையில் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த பிஸ்கேட்டை போல் இந்த ஓரியோ பக்கோடாவும் அப்பகுதி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ஐட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ ஆச்சரியத்துடன் பார்த்தும் பலரும் இந்த பக்கோடா செய்து இவ்வளவு எளிதா என்று பதிவிட்டு வருகின்றனர். தற்போது வரை இந்த வீடியோ 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
மேலும் படிக்க: திருமணத்தில் கேக் வெட்ட தடை... விதித்தது யார்? காரணம் என்ன?