நம்மிடம் தற்போது மேற்கத்திய கலாச்சாரம் நகரம் முதல் கிராமங்கள் வரை அனைத்துப்பகுதிகளிலும் பரவலாக  தென்படுகிறது. குறிப்பாக முன்பெல்லாம் திருமணங்கள் என்றாலே பாரம்பரியத்திற்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் இன்றையக் காலக்கட்டத்தில் பெரும்பாலான திருமணங்களில் அந்தந்த மாநிலத்திற்கென்ற உடைக்கலாச்சாரம் இருப்பதே இல்லை. இதோடு ஆள் உயர கேக்குகளை வெட்டியும், ஆடல், பாடல் மற்றும் மது என திருமண நிகழ்வுகளே முற்றிலும் மாறியுள்ளது. இந்நிலையில் இதுப்போன்ற நிகழ்வுகள் எல்லாம் எங்களது கலாச்சாரத்தில் இல்லை எனவும், இதனை கலாச்சார சீரழிவாகப்பார்க்கிறோம் என்பதால் கேக் வெட்டுவது மற்றும் மதுவகை போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளதாக பொன்னம்பேட்டை குடகு சமாஜ் தலைவர் கூறியுள்ளார்.





கர்நாடக மாநிலம் குடகு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கென்று தனித்துவமான கலாச்சாரம் உள்ளது. இதனை முறையாக பின்பற்றுவது என்பது அனைவரின் கடமையாகும். எனவே தான் குடகு மக்களின் திருமண நிகழ்வுகளின் போது, புதுமண தம்பதிகள் கேட் வெட்டுவதும், மது வகைகளை பரிமாறுவதும் நமது கலாச்சாரத்தில் இல்லை எனவும், இது தொடர்பாக இனி மேற்கொள்ளக்கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  இதனையடுத்து கலாச்சாரத்தைக்காப்பாற்றுவதற்கு இதுப்போன்ற நடவடிக்கைகளை வரவேற்பதாக வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றது.  மேலும், “ இந்த கலாச்சாரம் நிச்சயம் வரும் தலைமுறையினரைப் பாதிக்கும்.. இந்த முடிவு நிச்சயம் வரவேற்கத்தக்கது என பாராட்டுகளை குடகு வாழ் பகுதியில் வசிக்கும் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.


இதோடு மட்டுமின்றி மணமகன் தாடி வைத்துக்கொண்டும் திருமண நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளையும் பெரியவர்கள் பாராட்டினாலும் இளைய தலைமுறையினரிடையே சிறு வருத்தத்தினை ஏற்படுத்தினாலும் அவர்களும் மகிழ்ச்சியுடன் தான் வரவேற்கின்றனர். மேலும் படத்தயாரிப்பாளர்களும் குடகு மக்களின் கலாச்சாரத்தைப்பாதுகாக்க இதுப்போன்ற நடவடிக்கை இல்லாவிடில் மிகப்பெரிய பேரழிவு தான் எனவும் கருத்துக்களைப்பகிர்கின்றனர்.


குறிப்பாக பல இடங்களில், பல்வேறு சமூகத்தைச்சேர்ந்த மக்களின் கலாச்சாரங்கள் அழிந்துவரும் நிலையில் இந்த நடவடிக்கையைப்பாராட்டுவதாகவும், திருமண நிகழ்வுகளில் பாரம்பரிய உடை அணிந்து நடனம் பொன்ற கொடவா இன சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் தங்களது பூர்வீக கலாச்சாரத்தைப்பாதுகாக்க ஹலால் போன்றவற்றைத் தடை செய்துள்ளனர். இதன் மூலமாகவும் மக்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.





தனக்கென்று ஒரு மொழி, உடை, கலாச்சாரம் போன்றவற்றை உடன் கொண்டிருந்தாலும் இந்த மக்கள் சமூகத்தில் முன்னேறியுள்ளனர் என்பதற்கு இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியான மறைந்த பீல்ட் மார்ஷல் கே.எம் கரியப்பா மற்றும் மறைந்த ஜெனரல் கே.எஸ்.திமையா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா போன்றவற்றவர்கள் தான். இவர்கள் அனைவரும் குடகு இனத்தைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.