பெண் குழந்தைகள் என்றாஎப்போதும தந்தையுடன் அதிகளவில் அன்பு பாராட்டி கொண்டிருப்பார்கள்.  அந்த அன்பை பார்க்கும் போது நமக்கு ஒருவிதமான அளவு கடந்த  மகிழ்ச்சி. அந்தவகையில் பெண் குழந்தை ஒன்று தன்னுடைய தந்தையை விமானத்தில் பார்த்து வியந்து சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 


 


இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பெண் குழந்தை ஒன்று தான் பயணம் செய்த விமானத்தில் தன்னுடைய தந்தை விமானியாக இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளார். அதன்பின்னர் தன்னுடைய தந்தை விமானி அறைக்கு போகும் நேரத்தில் அவரை அப்பா … என்று அழைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்” என்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


 






இந்தக் காட்சியை பார்க்கும் போது அது நமக்கு மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை 1.25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன்  2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை பார்த்து ரசித்து உள்ளனர். பெண் குழந்தைகள் என்றால் எப்போதும் தந்தைகளுக்கு மிகவும் பிடித்தவர்கள் என்பதை இந்த வீடியோ நன்றாக உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. 


மேலும் இந்த வீடியோ பார்த்து பலரும் நெகிழ்ச்சி அடைந்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இது உண்மையான தந்தை-மகள் அன்பு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. 


 மேலும் படிக்க: கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரத்தை விற்கும் மாநில அரசு - மத்திய அரசின் குற்றச்சாட்டு!