தனியாருக்கு அதிக விலைக்கு மின்சாரங்களை விற்பதாக மாநில அரசுகளை மத்திய அரசு கடுமையாக சாடியுள்ளது.
நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனல்மின் உற்பத்தி நிலையங்களில் கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. இதன்காரணமாக, மின் உற்பத்தி குறைந்துள்ளது. மின் உற்பத்தி, மின் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் பல மாநிலங்களில் மாநில அரசுகள் மின்வெட்டை அறிவித்துள்ளன. இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்களுக்கும், மின் உற்பத்தி நிலையங்களுக்கும் மத்திய மின்சாரஅமைச்சகம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
பல மாநிலங்கள் நுகர்வோருக்கு மின்சாரத்தை வழங்கவில்லை எனவும், அதேசமயம் அவர்கள் கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரத்தை விற்பனை செய்வதாகவும் தங்களின் கவனத்திற்கு வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மின்சார விதிகளின் ஒதுக்கீட்டின்படி, மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி ஆகக்கூடிய மின்சாரத்தில் 15 சதவீதம் ‘unallocated power’ ஆக ஒதுக்கி வைக்கப்படுகிறது. இதில் இருந்து தேவைப்படும் மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. எனவே நுகர்வோருக்கு 24 மணி நேரமும் மின்சார வசதியை பெறுவதற்கான உரிமை உள்ளது. நுகர்வோருக்கு மின்சார தேவையை பூர்த்தி செய்வது மின்விநியோகங்களின் பொறுப்பு என மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நுகர்வோருக்கு மின்சார உற்பத்தி நிலையங்கள் முதலில் மின்சாரத்தை வழங்க வேண்டும் எனவும், மின்சார உற்பத்தி நிலையங்கள் மின்சார சந்தைகளில் மின்சாரத்தை விற்கக்கூடாது எனவும், பல மாநிலங்கள் கூடுதல் விலைக்கு மின்சாரத்தை சந்தைகளில் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால், மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற ‘unallocated power’ திரும்பப் பெறப்பெற்று, தேவை இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு இந்த மின்சாரம் வழங்கப்படும் என்றும் மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்