இந்தியாவில் சமீப காலங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டிசல் விலை காரணமாக பலரும் அதற்காக சில ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஒருபக்கம் சிலர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பயன்பாட்டை குறைத்து வருகின்றனர். அதேபோல் ஒரு சிலர் மீண்டும் மிதிவண்டி பக்கம் தங்களுடைய கவனத்தை திருப்பி வருகின்றனர். அந்தவகையில் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை காரணமாக ஒருவர் ஒரே வண்டியில் 6 பேர் பயணம் செய்யும் வகையில் ஒரு முன்னெடுப்பை செய்துள்ளார். 


இந்த இருசக்கர வண்டி தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பொதுவாக நாம் 6 பேர் பயணம் செய்வது என்றால் ஒரே வண்டியில் 6 பேர் நெருக்கி உட்கார்ந்து இருப்பார்கள் என்று நினைப்போம். ஆனால் அதற்கு மாறாக இந்த வீடியோவில் ஒரு வித்தியாசமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு இருசக்கர வண்டியின் பின்புறத்தில் ஏணி ஒன்றை வைத்துள்ளனர். அந்த ஏணியின் பின் பகுதியில் மேலும் இரண்டு சக்கரத்தை கட்டியுள்ளனர். அந்த ஏணியில் மேலும் 4 பேர் அமர்ந்து பயணம் செய்கின்றனர். 


 






இதன்காரணமாக ஒரே வண்டியில் 6 பேர் பயணம் செய்வதால் மற்றொரு வண்டி எடுக்க தேவையில்லை. அத்துடன் ஒரு வண்டி பெட்ரோலில் 6 பேர் பயணம் செய்யும் வசதியும் இதில் கிடைக்கிறது. இந்த வீடியோவை தற்போது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்தப் பதிவை பார்த்து பலரும் உயர்ந்து வரும் பெட்ரோல் விலைக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்றும் கூறி கலாய்த்து வருகின்றனர். 


மேலும் படிக்க: பிரதமர் மோடி புகைப்படத்தின் மீது சோளக்காட்டு பொம்மை படத்தைவைத்து மார்ஃபிங் செய்தவர் கைது..!