சமீப காலங்களாக தலைவர்களின் படங்களை வைத்து சமூகவலைதளங்களில் சித்தரித்து பல போலி படங்கள் பகிரப்பட்டன. அந்தவகையில் ஒருவர் தற்போது சில தலைவர்கள் படங்களை சித்தரித்து வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். யார் அவர்? எப்படி கைது செய்யப்பட்டார்?


உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாம்பல் பகுதியிலுள்ள சந்தவௌசி கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் குப்தா. இவர் சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி, அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை தவறாக சித்தரித்துள்ளார். மேலும் அந்தப் படங்களை சோளக்காட்டு பொம்மைகளில் வைத்து வாட்ஸ் அப் தளத்தில் பலருக்கு பகிர்ந்துள்ளார். மேலும் இந்தப் படங்களும் ட்விட்டர் தளத்திலும் பகிரப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் வந்த பதிவை வைத்து ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அபிஷேக் குப்தா இதை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தான் இந்த தலைவர்களின் படங்களை மார்பிங் செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.  






முன்னதாக கடந்த மாதம் பிரதமர் மோடி தொடர்பாக இதேபோன்று மார்பிங் செய்யப்பட்ட படம் ஒன்று தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வந்ததாக ஒரு போலி படம் பகிரப்பட்டு வந்தது. அந்தப் போலி படம் தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் தளத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஒரு பதிவை செய்திருந்தது. அதில் இந்தப் படம் முழுக்க போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கும் எங்களுடைய நாளிதழுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அந்தப் பதிவில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இந்த போலி படம் பிரதமர் மோடி கடந்த மாதம் அமெரிக்க பயணம் மேற்கொண்ட போது பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: கேரளாவில் பேய் மழை.. வெள்ளம்.. நிலச்சரிவு.. மிதக்கும் கோட்டயம்!