தமிழ்நாடு: 


அதிமுகவின் பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது.முன்னதாக, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிக்கு சசிகலா நடராஜன் நேற்று அஞ்சலி செலுத்தினார்.  


அஇஅதிமுக-வில் சசிகலா-விற்கு என்றுமே இடமில்லை; ஆஸ்கர் வாங்கும் அளவிற்கு நடித்தாலும், மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள்; யானை பலம் பொருந்திய அஇஅதிமுக-வை கொசு தாங்கிப் கொண்டிருப்பதாகக் கூறுவதா? என்று முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,30,251  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,233 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 160  பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15  பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.  1434 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.


தமிழ்நாடு ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம் அமைத்ததற்காகவும், மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன்  முதலமைச்சர்  மு. க ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்


விடுதலை புலிகள் குறித்தும், பிரபாகரன் பற்றியும் வெறும் பொய்யை மட்டுமே பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விடுதலை புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


 






இந்தியா: 


காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் புதுதில்லியில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று  நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறுவதற்கு ஒற்றுமையும், சுயகட்டுப்பாடும், ஒழுக்கமும் அவசியமாகிறது என்று அதன் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார்.


உலகம்:  


பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் கொல்லப்பட்டது தீவிரவாதச் செயல் என்று அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.


விளையாட்டு:


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க  ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை டிராவிட் ஏற்பார் என்று கூறப்படுகிறது. 


சிஎஸ்கே அணியின் நலன் கருதியும், 2022ல் ஜனவரியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தின் அடிப்படையிலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடனான தனது பயணம் தீர்மானிக்கப்படும் என்று அந்த அணியின் கேப்டன் மகேந்ந்திர சிங் தோனி தெரிவித்தார்.