மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழைக்கு மத்தியில் குடியிருப்பு பகுதிக்குள் முதலை ஒன்று நீந்தி வந்துள்ளது. ஒரு மணி நேர மீட்பு பணிக்கு பிறகு, அந்த முதலை பிடிக்கப்பட்டது.


 






இதுகுறித்து துணை பிரிவு காவல்துறை அலுவலர் அஜய் பார்கவா கூறுகையில், "பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காலனியில் அதிகாலையில் முதலை தென்பட்டது. இதைத் தொடர்ந்து அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாதவ் தேசிய பூங்காவில் இருந்து மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு ஒரு மணி நேர முயற்சிக்கு பின் முதலை பிடிக்கப்பட்டது.


எட்டு அடி நீளமுள்ள முதலை பின்னர் சாங்க்ய சாகர் ஏரியில் விடப்பட்டது. முதலை அதன் அருகில் உள்ள ஆற்றிலிருந்து காலனிக்குள் நுழைந்திருக்கலாம்" என்றார். மீட்பு நடவடிக்கையின் வீடியோவில், குடியிருப்பு காலனியின் குறுகிய பாதையில் ஒரு வீட்டின் முன் முதலையைக் காணலாம்.


 






சனிக்கிழமை இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி தலைமைச் செயலகத்தை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் ஊழியர்களுக்கு உத்தரவிட்டது.


மழைகாலத்தில், வெள்ளத்தில் முதலைகள் போன்ற ஆபத்தான ஊர்வனங்கள் அடித்து செல்வது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இம்மாதிரியான முதலைகள் நுழையம் சம்பவம் தினசரி செய்தியாகவே வெளிவந்த வண்ணம் இருக்கிறது.


 






மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண