சுதந்திர தின விழாவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரத் துறைக்கான பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க வாய்ப்புள்ளது. இத்திடத்திற்கு ஹீல் இன் இந்தியா, ஹீல் பை இந்தியா என்று பெயர் சூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிக்கில் செல் அனீமியா எனும் நோயை 2047க்குள் ஒழிக்க பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அரிவாள் உயிரணுச் சோகை அல்லது சிக்கில் நோய் (Sickle cell disease (SCD) என்பது ஒரு மரபணுவால் வந்த ஒரு இரத்தக் கோளாறு நோயாகும். இந்தச் கோளாறு உள்ளவர்களுக்கு செங்குருதியணுக்களில் இயல்பான எண்ணிக்கையில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு தென்படுவதில்லை. அதனால், சீரான ரத்த ஓட்டமில்லாமல், போதுமான ஆக்சிசன் கிடைக்காமல் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகள் தங்களின் செயல்திறனை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் இரத்தச் சிவப்பணுக்கள் முழுமையாக வளர்ச்சி அடையாமல் அரை வட்டமாக, அரிவாள் போன்று இருக்கும். அரிவாள்செல் சோகையின் சிக்கல்கள் பொதுவாக 5 முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் தொடங்குகின்றன. இதனால் வலி ஏற்படுதல் ("அரிவாள் செல் நெருக்கடி"), அனீமியா, கைகள் மற்றும் கால்களில் வீக்கம், பாக்டீரியா தொற்றுக்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் உருவாகலாம்.[1] நோயிக்கு ஆளானவர்களுக்கு வயது ஏறும்போது நாட்பட்ட வலி ஏற்படலாம். வளர்ந்த நாடுகளில் இவர்களின் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 60 ஆண்டுகள் ஆகும்.


அதேபோல், சர்விகல் கேன்சர் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் ஹியூமன் பேப்பிலோமா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிசெலுத்தும் திட்டத்தையும் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ‘PM Samagra Swasthya Mission’ பிஎம் சமக்ர ஸ்வஸ்தய மிஷன் திட்டத்தின் கீழ் இது அறிவிக்கப்படும்.


சர்விகல் கேன்சர் என்பது கருப்பை வாயின் நுழைவாயில் பெண் உறுப்பு வெஜ்ஜைனா இரண்டையும் இணைக்கும் இந்த இடம் தான் சர்விக்ஸ் என்று சொல்கிறார்கள். இந்த இடத்தில் செல்களின் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக இருக்கும் போதும் உடலுக்கு பரவும் போதும் உண்டாவதே கருப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.




ஹீல் இந்தியா திட்டம்:


ஹீல் இன் இந்தியா, ஹீல் பை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 27 மருத்துவமனைகளை தேர்வு செய்து மருத்துவச் சுற்றுலாவுக்கான இடமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 10 விமானநிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு வரும் சர்வதேச நோயாளிகளுக்கு உதவ பன்மொழி மையம், விசா நடைமுறைகளை எளிமையாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா மேற்கொள்ள ஆர்வத்துடன் இருக்கும் நாடுகள் பட்டியலில் 44 நாடுகளை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சார்க், வளைகுடா நாடுகளாகும்.


இவை தவிர PM Jan Arogya Yojana, Ayushman Bharat Digital Mission, PM Ayushman Bharat Health Infrastructure Mission ஆகிய திட்டங்களும் மாவட்ட அளவிற்கும் கொண்டு செல்லப்பட்டு கடைக்கோடி மக்களுக்கும் எட்டும் வகையில் செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.


இதனால் நாளை பிரதமர் உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.