வேகமாக ஓடும் ரயிலின் ஜன்னலில் தொங்கி கொண்டு, தனது உயிரை காப்பாற்றுங்கள் என திருட வந்தவர் கெஞ்சும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அந்த திருடன் ரயிலுக்கு உள்ளே இழுக்கப்பட்டு மக்கள் அவருக்கு அடி தருவதையும் வீடியோவில் பார்க்கலாம்.






ரயிலில் பயணி ஒருவரிடம் இருந்து அந்த திருடன், மொபைல் போனை திருட முயற்சித்துள்ளார். பிகாரில், இந்த மாதத்தில் இது போன்ற சம்பவம் நிகழ்வது இது இரண்டாவது முறை. பாகல்பூரில் பயணிகள் ரயிலில், ஜன்னல்கள் வழியாக கொள்ளையடிக்கும் சம்பவத்தின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.


இதேபோன்ற சம்பவம் இந்த மாத தொடக்கத்தில் பெகுசராய் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. லைலாக், கோகா ரயில் நிலையத்திற்கு நடுவே ஜமால்பூர் - சாஹிப்கஞ்ச் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு பயணியிடமிருந்து மொபைல் போனைப் பறிக்க முயன்றுள்ளார்.


அப்போது, பயணிகளிடம் அவர் பிடிபட்டுள்ளார். திருடர்கள் குழுவொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அவரைத் தவிர அனைவரும் தப்பிச் சென்றுவிட்டனர். வேகமாக சென்ற ரயிலில் தொங்கிக் கொண்டிருந்த அவரின் கைகளையும் சட்டையையும் பயணிகள் பிடித்துள்ளனர். தனது கைகளை விட்டுவிட வேண்டாம் என திருடர் கெஞ்சி உள்ளார்.


மற்ற பெர்த்தில் இருந்த பயணிகள் இந்த சம்பவத்தை படம் பிடித்தனர். ஆத்திரமடைந்த பயணிகள் திருட வந்தவரை உள்ளே இழுத்து வந்து அறைந்து, அடி கொடுத்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு ரயில்வே போலீசாரை தொடர்பு கொள்ள முடியவில்லை.






இதேபோன்ற ஒரு சம்பவம் பிகாரில் உள்ள பெகுசராய் பகுதியில் செப்டம்பர் 14 அன்று நிகழ்ந்துள்ளது. மொபைல் போனை திருட முயற்சித்தபோது, ரயில் நகர தொங்கிவிட்டது. இதையடுத்து, ஓடும் ரயிலின் ஜன்னலில் தொங்கியபடி திருடன் பயணிகளிடம் பிடிபட்டார். தன்னை கீழே விட்டு வேண்டாம் என கெஞ்சிய படி திருடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.