உலகளாவிய அளவில் 18 வயதிற்கு கீழ் உள்ளோரை, சிறுவர் மற்றும் சிறுமியர் என்று உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன.இந்த வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளிடம் பாலியல் உறவு அல்லது பாலியல் வன்முறையில் ஈடுபடுவது, கிரிமினல் குற்றமாகும்.இந்தியாவைப் பொறுத்தவரை போக்சோ என்ற சட்டம் இதற்காக உருவாக்கப்பட்டு, மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.


இதைப் போலவே 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார் மற்றும் சிறுமியர்களின் ஆபாச படங்களை வெளியிடுவதற்கும்,பகிர்வதற்கும் உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளும் கடுமையான தண்டனைகளை விதித்து இருக்கிறது.


ஆகையால் whatsapp, facebook, twitter மற்றும் instagram போன்ற சோசியல் மீடியாக்களில்.18 வயது பூர்த்தி அடையா குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுவது,மற்றும் பகிர்வது,இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி 1மிகக் கடுமையான கிரிமினல் குற்றமாகும்.இருப்பினும்,
சமூக அக்கறையற்ற சில நபர்கள், இத்தகைய புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிடவும் பகிரவும் செய்கிறார்கள். இத்தகைய செயல்களை கண்காணிக்கும் அல்லது புகாரை பெற்று நடவடிக்கை எடுக்கும், அமைப்பான டெல்லி குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை ஆணையம், சமீபத்தில்,டெல்லி காவல்துறைக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.


அதன்படி,குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட,23 டிவிட்டர் கணக்குகளை முடக்கி, உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே சமயம் இதைப் பற்றிய விரிவான விளக்கத்தை தரும்படி ட்விட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு நோட்டீசை அனுப்பி உள்ளது, டெல்லி குழந்தைகள் மற்றும் மகளிர் நல ஆணையம்.


குழந்தைகளின் ஆபாச படம்  சம்பந்தப்பட்ட வீடியோக்களை வெளியிட்ட 23 ட்விட்டர் கணக்குகளை புதன்கிழமை முடக்கியுள்ளதாக டெல்லி காவல்துறையின் intelligence fusion and strategic operations எனப்படும் IFSO பிரிவு துணை கமிஷனர் தெரிவித்திருக்கிறார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி குழந்தைகள்  மற்றும் மகளிர் நல ஆணையம் 23 டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை ஒரு சில நாட்களிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.


இதைப் பற்றி டெல்லி காவல் துறையின் IFSO, துணை கமிஷனர் மேலும் தெரிவிக்கையில், செப்டம்பர் 20ஆம் தேதி அன்று எங்களுக்கு கிடைத்த தகவலின்படி அன்றைய தினமே FIRபதிவு செய்யப்பட்டது. ஆதாரங்களை சேகரித்த பின்னர் ட்விட்டருக்கு  கடிதம் எழுதி கணக்குகளை முடக்கினோம். இந்த ட்விட்டர் கணக்குகளை பற்றிய முக்கிய விவரங்களை சேகரித்துள்ளோம். என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும் இந்த வழக்கை விசாரிக்க, நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,அவர் தெரிவித்தார்.இதில் இரண்டு தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் இரண்டு விசாரணை குழுக்களைக் கொண்ட நான்கு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தைகளின் ஆபாச  வீடியோக்களை வெளியிட்ட 23 ட்விட்டர் கணக்குகள் தொடர்பாக,ட்விட்டரிடமிருந்து பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம், ”என்று டெல்லி காவல்துறையின் IFSO பிரிவு  துணை கமிஷனர் தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில் இதுபோன்ற குற்ற நடவடிக்கை சம்பந்தமாக 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, டிசம்பர் 21 இல் இருந்து ஜனவரி 22 வரை இடைப்பட்ட காலத்தில் 132 கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இனிவரும் காலங்களிலும் இதைப் போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.


டெல்லி குழந்தைகள்  மற்றும் மகளிர் நல ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது போன்ற  அருவருக்கத்தக்க மற்றும் வெளிப்படையான குற்றச் செயல்களை ட்விட்டரின்  மூலம் வெளியிடுவதை தடுக்க ட்விட்டர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?" என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதற்கு பதில் அளித்துள்ள ட்விட்டர் நிறுவனம்,ஆணையம் கேட்டிருந்த விவரங்களை அனுப்பி இருக்கிறது. மேலும் ஆணையம் குறிப்பிட்டு இருக்கின்ற கணக்குகள் உடனடியாக நீக்கி உள்ளது.மேலும் விரிவான பதில்களை தர கால அவகாசம்  கேட்டிருந்தது. இதற்கு குழந்தைகள் மற்றும் மகளிர் நல ஆணையம் இந்த மாதம் அதாவது செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருக்கிறது.