கடந்த சனிக்கிழமையன்று மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள பாக்பட் என்ற இடத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய ஒருவர் எறிந்த தண்ணீர் பலூன் ஆட்டோ ஓட்டுநர் மீது மோதியதால், நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற ஆட்டோ திடீரென நிலைதடுமாறி மோசமான சாலை விபத்தில் சிக்கியது.






தண்ணீர் பலூன் ஆட்டோ ஓட்டுநரை மிகவும்  பலமாக தாக்கியதாகத் தெரிகிறது, இதனால் வாகனம் அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து ஓட்டுநர் நிலை தடுமாறி விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார். 


இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பலூன் எறிந்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர்.


ஹோலிப் பண்டிகை வட இந்தியாவில் தொடங்கியிருந்தாலும், மற்ற மாநிலங்களிலும் பல்வேறு கதைகளுடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா, பார்சனா, விர்த்வான்,  ஆகிய பகுதிகளில் முதலில் ஹோலிப் பண்டிகை தொடங்குகிறது. மதுரா கிருஷ்ணரின் பிறப்பிடம் என்பதால் இந்தப் பகுதிகளில் ஹோலி பண்டிகை இங்கு மிகவும் மகிமையுடன் கொண்டாடப்படுகிறது.ஹோலியின் போது, மதுராவில் உள்ள கோயில்கள் திருவிழாவைக் கொண்டாட விரிவான நிகழ்வுகளை நடத்துகின்றன. இங்குள்ள பெண்கள் குச்சியுடன் தங்களது கணவர்களைத் துரத்துவார்கள். கிருஷ்ணன் தன் நண்பர்களுடன் ராதாவிடம் சேட்டைகள் செய்தபோது, ராதையின் தோழிகள் அவர்களை கம்புகளை வைத்து துரத்தினர் என்பது கதை. பீகார் மாநிலத்தில், போஜ்புரி மொழியில் ஹோலிப் பண்டிகை பகுவா என்றழைக்கப்படுகிறது. இங்கு வண்ண பொடிகளுடன் இசையோடு கொண்டாடி மகிழ்கின்றனர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாங்க் என்ற பானமும் இடம்பெறுகிறது.கேளர மாநிலத்தில் ஹோலிப் பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.


இங்கு உக்ளி, மஞ்சள் குளியல், என்றழைக்கப்படுகிறது. மேலும், இங்குள்ள கசிர்புரம் திருமலா என்ற கோயிலில் கொங்கனி மக்கள் இதைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். இவர்கள் ஹோலிப் பண்டிகைக்கு இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்துகின்றனர். மஞ்சள் பொடியைப் பயன்படுத்துவதால், மஞ்சள் குளியல் என்ற பெயர் வந்தது. மஞ்சள் மருத்துவ குணங்கள் கொண்டதால் மக்கள் மஞ்சள் பொடியை ஹோலிப் பண்டிகைக்கு பயன்படுத்துகின்றார்கள்.கோவா மாநிலத்தில் ஷிக்மோ திருவிழா ஒரு பெரிய வசந்த கொண்டாட்டமாகும். இங்கு ஹோலிப் பண்டிகையின்போது, பாரம்பரிய நாட்டுப்புற நடனம், வண்ணப் பொடிகள், இனிப்பு ஆகிவற்றுடன் கொண்டாடப்படுகிறது. கோவாவில் சுற்றுலாப் பயணிகள் கூட இந்த பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்..


ராஜஸ்தான் மாநிலத்தில் ஹோலிப் பண்டிகை அரச வம்சத்தினர் போல் உடையணிந்து கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்கள் ஹோலிகா தஹானுடன் தொடங்குகின்றன. ஹோலி அன்று அங்குள்ள ராஜாவால் ஏற்றப்படும் நெருப்பு ஹோலி தஹான் என்றழைக்கபப்டுகிறது. அதன்பிறகு, ஷம்பு நிவாஸ் அரண்மனையிலிருந்து ஒரு அரச ஊர்வலம் புறப்பட்டு, மானெக் சௌக் அரச இல்லத்தில் நிறைவடைகிறது. இந்த அணிவகுப்பில், அரச குடும்பத்தார் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் மீது அமர்ந்து இசைக்குழுவினரின் இசையை ரசிப்பார்கள். இரவு விருந்தைத் தொடர்ந்து இறுதியாக, கொண்டாட்டம் அற்புதமான வானவேடிக்கைகளுடன் முடிவடைகிறது. இதேபோஒ, ஜெய்ப்பூரில் நடக்கும்  நிகழ்ச்சிகளில் வழக்கமான ராஜஸ்தானி நாட்டுப்புற இசை, நடனம் மற்றும் குலால் நாடகம் ஆகியவை அரங்கேறும்.