உக்ரைன் ரஷ்யா போரில் சிக்கிக் கொண்ட இந்திய மாணவர்களை மீட்கும் ஆப்ரேஷன் கங்காவில் பணியாற்றிவர்களில் மிகவும் குறிப்பிட வேண்டியவர் விமானி ஷிவானி கல்ரா. ‘ஆப்ரேஷன் கங்காவில் இணைந்து உக்ரைனில் நம் மாணவர்களை மீட்க உடன்பாடாக இருக்கிறீர்களா?’ எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு சற்றும் யோசிக்காமல், ‘ரெடி’ என பதில் அளித்தவர் ஷிவானி.
இத்தனைக்கும் அவருக்கு அழைப்பு வந்த சமயம் தனது சகோதரரின் திருமண ஏற்பாடு வேலைகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அதற்கு அடுத்த சில தினங்களிலேயே ரொமானியாவில் தஞ்சமடைந்திருந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்டு வந்தது
‘நாங்கள் மாணவர்கள் காத்துக்கொண்டிருந்த பகுதியை அடைந்தோம். சோகமாக இருந்த அவர்களது முகம் எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியானது. அவர்களை இருக்கையில் அமர வைத்து, அவர்களைப் பாதுகாப்பாக வீடு சேர்ப்போம் என உறுதி அளித்தி அவரக்ளைக் கூட்டி வந்தோம். அன்றைய தினம் ரொமானியாவிலிருந்து மட்டும் 249 பேரை அழைத்து வந்தோம்’ என்கிறார் ஷிவானி.