வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங், கடற்படை துணைத் தளபதியாக பொறுப்பேற்று கொண்டு கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


சஞ்சய் ஜஸ்ஜித் சிங்,  கடற்படை துணைத் தளபதியாக ஏப்ரல் 1-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.  இன்று அவர் , தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தி, பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமான, புதுதில்லி சவுத் பிளாக்கில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.






வைஸ் அட்மிரல்  சஞ்சய் ஜஸ்ஜித் சிங் ஒரு ராணுவ குடும்பத்தில் பிறந்தவர். மூன்றாம் தலைமுறை அதிகாரி ஆவார். இவரது தந்தை ஜஸ்ஜித் சிங், இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் ஜூலை 1, 1986 அன்று இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டார்.


புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டப்படிப்பு முடித்தார். மேலும் 1986-ல் இந்திய கடற்படையின் நிர்வாகக் கிளையில் நியமிக்கப்பட்டார். 37 ஆண்டுகால அவரது பணி வாழ்க்கையில், இந்திய கடற்படையின் பெரும்பாலான வகை கப்பல்களில் பணியாற்றியுள்ளதுடன், பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.


சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் எம்எஸ்சி மற்றும் எம்ஃபில், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் டிஃபென்ஸ் ஸ்டடீஸில் எம்ஏ மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் எம்ஏ (வரலாறு), எம்ஃபில் மற்றும் பிஎச்டி (கலை) ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.






அவரது சிறப்பான சேவையை பாராட்டி,  2009ல் நாவோ சேனா பதக்கமும், 2020ல் அதி விஷிஷ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது.


Also Read: போபால் மற்றும் புது தில்லி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்து, குழந்தைகளுடன் உரையாடிய பிரதமர் மோடி