இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.


அதிகரிக்கும் கொரோனா:


கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,389 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்தாண்டு அக்டோபருக்கு பின்னர் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் 2000-ஐ தாண்டியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.இந்த சூழல்  கொரோனா அலையின் தொடக்கமா என்ற அச்சத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.




கொரோனா நிலவரம்:


கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 73 ஆயிரத்து 335 ஆக உள்ளதாகவும், இதுவரை கொரோனா தொற்றிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 881 ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 4.47 கோடி மக்கள் கொரோனா தொற்றிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 


கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் - மாநில நிலவரம்


கடந்த 24 மணி நேரத்தில், புது டெல்லி, ஹரியானா,கேரளா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றிற்கு தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா குணமடைந்தோர் விகிதம்


கொரோனா தொற்றால் குணமடைந்தோர் விகிதம் 98.77 சதவீதமாக உள்ளதாக  மத்திய சுகாதார 


கொரோனா தடுப்பூசி 


நாட்டில் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றும் தடுக்கும் வழிமுறைகளும்  


உலக அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இப்போது, கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டுமின்றி,  பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் ஆராய்ச்சிகள், தடுப்பூசிகள் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


* அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். சானிட்டைஸர் வைத்திருபது கட்டாயமாகும். 


*  அனைவரும் தனி மனித இடைவெளியைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். 


* சுவாச வழிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். 


* வளாகங்கள் மற்றும் பேருந்துகளை முறையாகச் சுத்தப்படுத்தி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். 


* திறந்த இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட வேண்டும். 


* முகக் கவசங்கள், பிற உறைகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். 


* கோடைக்காலம் என்பதால் வெப்ப அதிக்கரித்துள்ளது. அதோடு, பருவ கால தொற்று நோய்களும் அதிகம் உள்ளதால் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும்.


* உடற்பயிற்சி, சுவாச பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 


இரண்டு ஆண்டுகால பெருந்தொற்று காலத்திற்கு பிறகு, கொரோனா தொற்றுடன் வாழ பழகிக்கொண்ட பாடங்களும் நமக்குண்டு. அதற்கேற்றவாறு கொரோனா வழிமுறை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு பிறகு, மக்கள் பொதுஇடங்களில் முக கவசம் அணிந்து செல்வதையும் காண முடிகிறது.