LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
LK Advani: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் உடல் நிலை, சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LK Advani: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உடல் நலக் குறைபாடு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்வானி மருத்துவமனையில் அனுமதி..!
டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அத்வானி இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது. முன்னாள் துணைப் பிரதமரான அத்வானி கடந்த வாரம் டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அத்வானி, ஜூன் 27 மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Just In




அயோத்தி ராம் மந்திர் இயக்கத்தை வழிநடத்திய தீவிர அரசியல்வாதியான இவருக்கு, கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அத்வானியின் இல்லத்திற்கே சென்று விருது வழங்கி கவுரவித்தார். விழாவில் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அத்வானியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ராம் மந்திர் திறப்பு விழாவை, குளிர் காலநிலை மற்றும் வயது முதிர்வு காரணமாக பாஜக மூத்த தலைவர் புறக்கணித்திருந்தார்.
யார் இந்த அத்வானி?
பாஜக துவங்கியதில் இருந்து, அதிக காலம் தலைவராக பதவி வகித்தவர் அத்வானி. அவர் முதன்முதலில் 1986 இல் அடல் பிஹாரி வாஜ்பாய்க்குப் பிறகு 1990 வரை பதவிக்கு வந்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.