பொதுவாக உணவு வீடியோக்கள் என்றால் எப்போதும் இணையத்தில் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக உணவில் சில வித்தியாசமான பொருட்களை சேர்த்து செய்யும் போது அது எப்போதும் வைரலாகும். அந்தவகையில் தற்போது சாட் உணவு தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த உணவில் எந்தவித பொருட்களை சேர்த்துள்ளனர். எதற்காக வைரலாகி வருகிறது?
தெருக்களில் கிடைக்கும் உணவுகளை பற்றி ரிவ்யூ செய்யும் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்று ஒரு சாட் உணவு தொடர்பான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் வரும் தகவலின்படி குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியில் அமைந்துள்ள சாட் கடையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடையில் ரோட்டி, மாங்காய், ஐஸ்கிரீம், உருளை கிழங்கு,மாதுளம் பழம் ஆகியவை வைத்து டபேலி சாட் என்ற சாட் செய்யப்படுகிறது. இந்தச் சாட் உணவை செய்யும் முறை அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவில் அவர் ஆரஞ்சு குச்சி ஐஸ்கிரீமை துண்டு துண்டாக வெட்டி சாட் உணவுடன் சேர்த்து சமைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை தற்போது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் பார்த்து ஆர்வத்துடன் இதை ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக தில்குஷ் தோசை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ள வீடியோ ஒன்று வைரலானது. 59 விநாடிகள் நிறைந்த இந்த வீடியோவில் தோசை மாவு உடன் சீஸ், பன்னீர், செரி பழங்கள், உளர்ந்த திராட்சை, பாதம் பருப்பு, முந்திரி மற்றும் சில காய்கறிகள் ஆகியவை சேர்த்து ஒருவர் தோசை ஒன்று சூடுகிறார். அதன்பின்னர் இந்த பொருட்களுடன் கரம் மசாலா உள்ளிட்டவற்றை சேர்த்து ஒரு நல்ல சுவையான தோசையாக மாற்றுகிறார். இறுதியில் அந்த தோசையை சிறப்பாக சிறிய துண்டுகளாக வெட்டி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார்.
மேலும் படிக்க: ‛இதுக்கு எண்டே இல்லையா சார்...’ 7.45 மணி நேரம் ஜூம் மீட்டிங் நடத்திய பேடிஎம்., தலைமை நிர்வாகி!