இந்திய தொலைதொடர்பு துறையில் 100 சதவீதம் வரை முன்அனுமதிப் பெறாமல்  முதலீடு செய்ய  அனுமதிக்கும் வகையில், தற்போதுள்ள வெளிநாட்டு முதலீடு அனுமதிக் கொள்கையில் திருத்தம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


 






 


தற்போது, வரை தொலைத்தொடர்பு துறையில் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது  அனுமதி பெறாமல் 49 சதவீதமாகவும், அதற்கும்  கூடுதலானது அரசு அனுமதி பெற்றும் என உள்ளது. 


இந்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து கூறுகையில், "தொலைத்தொடர்பு துறையில் 9 அமைப்பு ரீதியான அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களுக்கும், 15 செயல்முறை ரீதியான சீர்திருத்தங்களுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது" என்று தெரிவித்தார்.   


சீர்செய்யப்பட்ட மொத்த வருவாயின் (ஏஜிஆர்) வரையறையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. அதன்படி, தொலைத்தொடர்பு சாராத வருமானங்கள் (Non- telecom revenue)  சீர்செய்யப்பட்ட மொத்த வருவாயில் இருந்து நீக்கப்படுகிறது.  


உரிமக்கட்டணம் (License fee) மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் (Spectrum usage charges) ஆகியவற்றிற்கு தாமத கட்டணத்திற்கான அபராதம் எஸ்பிஐ வங்கி MCLR விகிதத்தில் இருந்து 2% வசூலிக்கப்படும். முன்னதாக, இந்த கட்டணம் 4% ஆக இருந்தது.     










 


உரிமம் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மீதான வங்கி உத்திரவாத தேவைகள் 80 சதவீதம் குறைப்பு.


இனிமேல் நடைபெறும் ஏலங்களுக்கு வங்கி உத்திரவாதம் தேவையில்லை. 


அலைக்கற்றை (ஸ்பெக்டரம்) ஏலம் எடுக்கும் காலம் 20 ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக அதிகரிப்பு.


எதிர்கால ஏலங்களில் பெறப்படும் அலைக்கற்றைகளை, 10 ஆண்டுகளுக்குப்பின் ஒப்படைக்கலாம்.


ஏலத்தில் பெறப்படும் அலைக்கற்றைக்கு அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படாது.


தொலை தொடர்பு சேவை அளிப்பவர்களின் பணப்புழக்க தேவைகளை நிவர்த்தி செய்தல்:


செலுத்த வேண்டிய ஆண்டு கட்டணங்களை 4 ஆண்டுகளை வரை காலம் தாழ்த்தி செலுத்தலாம்.


கடந்த ஏலங்களில் எடுத்த அலைக்கற்றைக்கான கட்டணங்களை, அந்தந்த ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி வகிதங்களுடன்,  4 ஆண்டுகள் வரை காலம் தாழ்த்தி செலுத்தலாம்.


செலுத்த வேண்டிய கட்டணத்தை பங்குகளாக மாற்றும் வழிகாட்டுதல்களை மத்திய நிதியமைச்சகம் இறுதி செய்யும்.


உற்பத்தியுடன் இணைந்து ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்:   


இதற்கிடையே, மோட்டர் வாகனமும் மற்றும் அது சார்ந்த தொழிற்துறையினருக்கும், ட்ரோன் துறையினருக்கும் உற்பத்தியுடன் இணைந்து ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


26 ஆயிரத்து 58 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ட்ரோன் துறைக்கு மட்டும் 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகனத்துறைக்கு இந்த திட்டம் உதவிடும் என்றும் மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.