இந்தியாவில் ‛பேடிஎம்’மின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜய் சேகர் சர்மா, அலுவலக ரீதியான ஜூம் மீட்டிங்கை 7 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவிற்கு வேடிக்கையானக் கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர்.
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிதி சேவைத் தளம் மற்றும் ஃபிண்டெக் நிறுவனமான பேடிஎம் நிறுவனம் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைக்கொண்டு செயல்பட்டுவருகிறது. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக விஜய் சேகர் சர்மா, இங்குள்ள ஊழியர்களைக்கொண்டு அனைத்துப்பணிகளையும் நேர்த்தியாக மேற்கொண்டுவருகிறார். தற்போது எங்கு சென்றாலும் Paytm இல்லாமல் இருக்கவே இருக்காது. அதற்கேற்றால் அனைத்து சேவைகளையும் மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வழங்க வேண்டும் என்பதற்காக இதன் நிர்வாக அதிகாரி அலுவலகர்களுடன் அடிக்கடி அலுவலகக்கூட்டங்களை நடத்துவது வழக்கம்.
அதுவும் தற்போது கொரோனா காலம் என்பதால் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ஜூம் கால் மூலமாகவே ஊழியர்களுக்கு அறிவுரை வழங்குவதோடு என்னென்ன பணிகள்? எந்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றனர். இதுப்போல தான் Paytm தலைமை நிர்வாக அதிகாரியான விஜய் சேகர் சர்மாவும் தன் நிறுவன ஊழியர்களுடன் அடிக்கடி ஜூம் கால் மீட்டிங் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் இந்த முறை சற்று அனைவரையும் ஆச்சரியத்தும் விதமாக ஒரு வேளை நாளை முழுவதும் அதாவது 7 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை ஜூம் காலில் பேசியுள்ளார். இதனை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “ஒரு நீண்ட ஜூம் கால் மீட்டிங்கை முடித்துவிட்டேன் என பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவினைப் பார்த்த நெட்டிசன்கள், பல்வேறு வேடிக்கையானக் கருத்துக்களை பதிவிட்டு வருவதோடு, இந்த பதிவு தற்போது ரொம்ப டிரெண்டாகியும் வருகிறது. குறிப்பாக இந்த நீண்ட நேர அதாவது 7 மணி 45 நிமிட ஜூம் கால் மீட்டிங் குறித்து,“ நீங்கள் ப்ளூடூத் இயர்போன்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் ... தயவுசெய்து எங்களிடம் அந்த பிராண்டைச் சொல்லுங்கள்" என்று வேடிக்கையாக கருத்தினைப்பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒரு பயனர் "நீங்கள் என்ன வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று தான் நாங்கள் நினைத்தோம் அதுக்குன்னு இப்படியா? எனவும் "ஐபிஓவுக்கு தயாரா?" என்பது போன்ற கருத்துக்களையும் பதிவிட்டுவருகின்றனர். மேலும் ஒரு டிவிட்டர் பயனர் நீங்கள் இன்னும் என் இலக்கைத்தொடவில்லை எனவும் நான் என்னுடைய காதலியுடன் 10 மணி தொடர்ச்சியாக பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக டிஜிட்டல் கொடுப்பனவுகளில் நாட்டின் முன்னணி நிறுவனமான பேடிஎம் தனது ஆரம்ப சலுகை ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது, இது 166 பில்லியன் ரூபாய்களை (2.2 பில்லியன் டாலர்) திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு வேளை அந்த நிலையை அடைந்தால், ஐபிஓ நாட்டின் மிகப்பெரிய அறிமுகமாகும் என தெரியவருகிறது.