Vijayakanth: 71ஆவது பிறந்தநாள்... தரிசனம் கொடுத்த கேப்டன்... உற்சாகத்தில் துள்ளிக்குதித்த தொண்டர்கள்!

சில நாள்களுக்கு முன் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்திருந்த நிலையில், இன்று விஜயகாந்த தொண்டர்கள், ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

Continues below advertisement

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தன் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் எளிமையாக தன் பயணத்தைத் தொடங்கி, இன்று சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் விருட்சமாக வளர்ந்து நிற்பவர் விஜயகாந்த். சினிமா, அரசியல் என முத்திரை பதித்து  தவிர்க்க முடியாத நபராகத் திகழும் விஜயகாந்த் இன்று தன் 71ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்நிலையில் தன் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ரசிகர்களை விஜயகாந்த் இன்று தன் கட்சி அலுவலகத்தில் சந்தித்து வருகிறார். சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சி  தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்து வரும் நிலையில், இன்று காலை முதலே அங்கு ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் கூடத் தொடங்கினர்.


கடந்த சில நாள்களுக்கு முன் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் பரவிய  நிலையில், அவரது மனைவியும், தேமுதிக கட்சி பொருளாளருமான பிரேமலதா உள்ளிட்ட தேமுதிகவினர்  இத்தகவலை மறுத்தனர்.

இந்நிலையில், தன்னுடைய உடல்நலன் பற்றி யாரும் நம்ப வேண்டாமெனவும், தான் நலமுடன் இருப்பதாகவும், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களை நேரில் தன் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்திப்பதாவும் விஜயகாந்த் நேற்று அறிக்கை பகிர்ந்து தெரிவித்திருந்தார்.  மேலும் தொண்டர்கள் யாரும் தன்னைப் பார்க்க வரும்போது சால்வை, மாலை உள்ளிட்ட அன்பளிப்புகளை தவிர்க்குமாறும் விஜயகாந்த் தன் அறிக்கையில் கோரியிருந்தார்.

இந்நிலையில், தேமுதிக தொண்டர்கள் இன்று காலை முதலே பெரும் உற்சாகத்துடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் கூடத் தொடங்கினர்.


அதன்படி தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் எல்.இ.டி திரை வைத்து , கலை நிகழ்ச்சிகளுக்கும் நடைபெற்று வரும் நிலையில்,  விஜயகாந்த் பட பாடல் வரிகளுக்கு ஏற்ப தொண்டர்கள் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தன் ரசிகர்களை விஜயகாந்த் சந்தித்து வருகிறார். 

தவசி படத்தின் ‘ஏலே இமயமலை’  பாடல் பின்னணியில் ஒலிக்க விஜயகாந்த் மேடைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், உற்சாகமாக தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். உடல்நிலை காரணமாக தொண்டர்களை சந்திப்பதை சில காலமாக விஜயகாந்த் தவிர்த்து வந்த நிலையில், அவரை சிறு இடைவெளிக்குப் பிறகு நேரில் சந்தித்த தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.


தன் அரசியல் எண்ட்ரி தொடங்கி 2016ஆம் ஆண்டு முதல் நடிகர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்தநாளை  வறுமை ஒழிப்பு தினமாகக் கடைபிடித்து வருவதுடன், பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement