உத்தராகண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி(Pushkar Singh Dhami) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் முதலமைச்சராக செய்யப்பட்டுள்ளார். 


டேராடூனில் நடந்த பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். உத்தராகண்ட் சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 40 இடங்களை கைப்பற்றியது குறிப்பித்தக்கது. காங்கிரஸ் 19 இடங்களிலும், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். மாநிலத்தில் வழக்கமான போக்கை முறியடித்து, உத்தரகாண்டில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த முதல் ஆளும் கட்சியாக பாஜக ஆனது.


கடந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பதவியேற்ற ராவத், அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக பதவி விலகினார். இதையடுத்து கடந்த 2021 இல் திரத் சிங் ராவத்துக்குப் பதிலாக தாமி, தற்காலிக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமிக்கு 2-வது முறையாக பதவியேற்பதாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பிறகு பாஜக அறிவித்தது. புஷ்கர் சிங் தாமி தனது சொந்த தொகுதியான கதிமாவை இழந்தாலும், இந்த முடிவு கட்சியின் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றதால் இந்த பதவி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



டேராடூனில் நடைபெற்ற சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, மாநில பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த தலைவர் மீனாட்சி லேகி ஆகியோர் கலந்துகொண்ட பிறகு ஒன்றாக இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர். 


மேலும், புஷ்கர் சிங் தாமி விரைவில் ஆளுநரை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புஷ்கர் சிங் தாமி, தேர்தல் வெற்றியில் அவரது பங்கை மாநிலக் கட்சியில் உள்ள பலர் ஒப்புக் கொண்டதால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் சித்தாந்த வழிகாட்டியான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் வலுவான ஆதரவு புஷ்கர் சிங் தாமிக்கு இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண