உத்தரகாண்ட் பனிச்சரிவு: சிக்கிய கடைசி உடலும் மீட்பு: 8 உயிரிழப்பு; வீட்டிற்குச் சென்றதால் தப்பிய ஒருவர்
Uttarakhand Avalanche: உத்தரகாண்ட் நிலச்சரிவில் 54 பேர் மீட்கப்பட்ட நிலையில், கடைசியாக இறந்த நிலையில் ஒருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் நிலச்சரிவில் 55 தொழிலாளர்கள் சிக்கியதக கூறப்பட்ட நிலையில், ஒருவர் விடுப்பில் சென்றதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், இதுரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக சோகமான தகவல் கிடைத்திருக்கிறது.
உத்தரகாண்ட் பனிச்சரிவு:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி பகுதியில் உள்ள மானா கிராமத்தில், கடந்த 28 ஆம் தேதி ( வெள்ளி கிழமை ) காலையில் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போதைய பனிச்சரிவில் 55 தொழிலாளர்கள் சிக்கியதாக அதிர்ச்சியான தகவல் வெளியானது. இந்த பனிச்சரிவானது, மானா கிராமத்திற்கு அருகே எல்லை சாலைகள் அமைப்பு முகாமிற்கு அருகே பனிச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து, பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், மீட்பு படையினர் விரைந்தனர். ஆனால், அப்போது, ஒருவர் மட்டும் விடுப்பில் சென்று வீட்டில் இருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மீதமுள்ள 54 பேரை மீட்கும் பணியில், மீட்பு பணியினர் தீவிரம் காட்டினர்.
8 பேர் உயிரிழப்பு:
இதையடுத்து, தொடர் மீட்பு பணியில் , இன்று மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுவரை 54 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் மொத்தம் 8 பேர் உயிரழிந்திருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்நிலையில், காணாமல் போன கடைசி தொழிலாளியான ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இறந்த நிலையில், அவரது உடல் மீட்கபட்டிருக்கிறது.
சமோலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் திவாரி தெரிவிக்கையில், சிக்கிய மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் 55 ஆக இருந்தது. ஆனால் அவர்களில் ஒருவர் விடுப்பில் மற்றும் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சிக்கியவர்களில் மொத்த எண்ணிக்கையானது 54 ஆகக் குறைந்தது. நேற்று வரை 4 பேர் இறந்தது கண்டறியப்பட்டது, இன்று காலை 3 பேர் இறந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் தற்போது இறந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில், மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கையானது 8 ஆக அதிகரித்துள்ளது.
54 பேரும் மீட்பு
பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளதாவது, பிப்ரவரி 28 ஆம் தேதி காலை ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து சிக்கிய 54 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மீட்புக் குழுவினர், தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை பனிப்பொழிவு காரணமாக, மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தொடங்கியது மீட்பு பணி என தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவிக்கையில் ” ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP), இந்திய விமானப் படை (IAF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து காணாமல் போன தொழிலாளர்களை தேடும் பணி நடைபெற்றது.
மேலும், அதிகாரிகள் தரையில் ஊடுருவும் ரேடார், தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் கேமராக்களைப் பயன்படுத்தினர்.
இந்திய விமானப்படையின் சீட்டா ஹெலிகாப்ரர், எம்ஐ-17 ஹெலிகாப்டர், புதைக்கப்பட்ட பொருள் கண்டறிய, நுண்ணறிவு அடிப்படையிலான ட்ரோன்கள் உள்ளிட்டவைகள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டதாக இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிக்கிய 54 பேர்களும் மீட்கப்பட்ட நிலையில், கடைசியாக சிக்கிய ஒருவர், இறந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.