மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி
கன்னியாகுமரியில் புனித அந்தோனியார் ஆலய விழாவின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உயரமான இரும்பு ஏணியை கொண்டு சென்றபோது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது
தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது. தலைமை காஜி அறிவிப்பை தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர். மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை.
மண்டக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்தபோஸ் பங்கேற்பு. வரும் 11ம் தேதி திருவிழாவை ஒட்டி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
நல்லிணக்கத்தை உணர்த்தும் ரமலான் - பிரதமர் மோடி
"புனித ரமலான் மாதத்தின் தொடக்கம், சமூகத்தில் அமைதி, நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும். இந்த புனித மாதமானது பிரதிபலிப்பு, நன்றியுணர்வு மற்றும் பக்தியை எடுத்துக்காட்டுகிறது, மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவையின் மதிப்புகளை நமக்கு நினைவுறுத்துகிறது" - பிரதமர் மோடி
உத்தராகண்ட் பனிச்சரிவு - 4 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மணா என்ற கிராமத்தில் கடந்த 28ம் தேதியன்று கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பணி செய்து வந்த 55 தொழிலாளர்கள் சிக்கினர். மீட்கப்பட்ட 50 பேரில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சியிருக்கும் 5 பேரை மீட்பதில் மீட்புப் பணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்கிறது டெஸ்லா
இந்தியாவில் தனது முதல் கார் ஷோரூமை மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் திறக்க எலான் மஸ்க் முடிவு என தகவல். 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்திற்கு மாதம் ரூ.35 லட்சம் வாடகை செலுத்த ஒப்பந்தம் என கூறப்படுகிறது.
சீன பல்கலைக்கழகங்களுக்கு தட விதித்த தைவான்
சீனாவைச் சேர்ந்த பீஹாங் பல்கலைக்கழகம், பெய்ஜிங் தொழில்நுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் மற்றும் விண்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட7 பல்கலைக்கழகங்களுக்கு தைவான் தடை விதித்துள்ளது. `தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன பல்கலைக்கழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து மோதல்:
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இன்றைய லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. துபாய் சர்வதேச மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியின் முடிவிலேயே இந்தியா அரையிறுதியில் யார எதிர்கொள்ளும் என்பது இறுதியாகும்.
கோலி படைக்க உள்ள புதிய சாதனை
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் விராட் கோலி இன்று தனது 300வது போட்டியில் களமிறங்க உள்ளார். இந்த மைல்கல்லை எட்டும் 7வது இந்திய விரர் எனும் பெருமையை பெறுகிறார். முன்னதாக தன்னுடைய 200வது ஒருநாள் போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கி கோலி சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
தொடர் தோல்வியில் ஆர்சிபி
மகளிர் பிரீமியர் லீகில் உள்ளூரில் நடைபெற்ற நான்காவது போட்டியிலும் பெங்களூரு அணி தோல்வி கண்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆர்சிபி, கடைசி 4 போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வி. மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் பிலே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.