உத்தரகாண்ட் அடுத்த ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். 






உத்தரகாண்ட் இன்று காலை பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ருத்ரபிரயாக் அருகே அலக்நந்தா ஆற்றில் டெம்போ டிராவலர் கவிழ்ந்தது.  டிராவலரில் சுமார் 17 பயணிகள் இருந்த நிலையில், வேனில் பயணித்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






மேலும், 10க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ருத்ரபிரயாக் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. SDRF மற்றும் போலீஸ் குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.